பொழுதுபோக்கு
வழுக்கை தலையால் இளைஞர்கள் படும்பாடு… ‘சொட்ட சொட்ட நனையுது’ படத்தை இந்த ஓ.டி.டி-யில் பார்த்து என்ஜாய் பண்ணுங்க!
வழுக்கை தலையால் இளைஞர்கள் படும்பாடு… ‘சொட்ட சொட்ட நனையுது’ படத்தை இந்த ஓ.டி.டி-யில் பார்த்து என்ஜாய் பண்ணுங்க!
இயக்குநர் நவீத் பரீத் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் ‘சொட்ட சொட்ட நனையுது’. இந்த படத்தில் கதாநாயகனாக நிஷாந்த் ரூஷோ ‘சொட்டை தலை’ கெட்டப்பில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக பிக்பாஸ் வர்ஷினி, ஷாலினி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் ரோபோசங்கர், கல்லூரி வினோத், கலக்கப் போவது ராஜா, ஆனந்த்பாபு உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம் பிரியங்கா நாயர் முதல் முறையாக இந்த படம் மூலம் சினிமாவில் அறிமுகமாகி இருக்கிறார். வழுக்கை தலையால் இளைஞர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை மையமாக கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. எங்கும் தொய்வடையாத விறுவிறுப்பான கதை, வெடித்துச் சிரிக்க வைக்கும் ஒன்லைனர்கள் என துடிப்பான வசனத்தை எழுதியுள்ளார் ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியின் மூலம் கவனம் பெற்ற ராஜா. ‘ஜிமிக்கி கம்மல்’ பாடல் பாடிய பாடகர் ரஞ்சித் உண்ணி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் கதைக் களம் என்னவென்றால் பணக்கார வீட்டுப் பையனான நிஷாந்த் ரூஸோவுக்கு திருமண வயதைக் கடந்தும் பெண் கிடைக்கவில்லை. அவரின் வழுக்கைத் தலையைக் கண்டு பெண்கள் தெறித்து ஓடுகிறார்கள். ஆனால், பக்கத்துவீட்டுப் பெண்ணான ஷாலினி அவரை ஏற்றுக்கொள்ளச் சம்மதிக்கிறார். ஆனால், திருமணத்துக்கு முதல் நாள் நிஷாந்த் ரூஸோவுக்கு வரும் ஒரு வீடியோவால் திருமணம் நின்றுபோகிறது. அதன்பிறகு தன் தலையில் முடியை முளைக்க வைத்தே தீருவேன் என்று உறுதி எடுக்கும் நிஷாந்த் ரூஸோவின் முயற்சிகளும், அவரது வாழ்க்கையில் வந்த இரண்டாவது திருமண வாய்ப்பும் என்னவானது என்பது தான் இப்படத்தின் கதை. தலையில் முடி இல்லாமல் போவது இயற்கை தான்; அதை வைத்து சக மனிதர்களைக் காயப்படுத்தாதீர்கள் என்கிற செய்தியைச் சுமந்து செல்கிறது இந்த படம். ‘சொட்ட சொட்ட நனையுது’ திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.Another relatable kadhai on the way friends🏃🏻🏃🏻#Sottasottananaiyuthu premieres from Oct 31st on @ahatamil@naveedhsfareed@actornishanth@RajaMimicry@itsshaalini@varshinivenkat_@rayeezamd@renju2786@eega_praveen@yuvaraj_kannan_@asulthanrajapro@trendmusicsouth… pic.twitter.com/cOWccIgcyvஇந்த நிலையில், இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ‘சொட்ட சொட்ட நனையுது’ திரைப்படம் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வருகிற 31-ஆம் தேதி வெளியாக உள்ளது. இதனை ஓ.டி.டி தளம் போஸ்டரை இணையத்தில் பகிர்ந்து அறிவித்துள்ளனர். பாலிவுட்டில் கடந்த 2019-ஆம் ஆண்டு ‘பாலா’, ‘உஜ்டா சாமன்’ என இரண்டு இந்திப் படங்கள் வெளியாகி இளவயது வழுக்கைத் தலைப் பிரச்சினை உருவாக்கும் உளவியல் சிக்கலை நகைச் சுவையுடன் ஆராய்ந்தன. தற்போது தமிழில் அதே கதைக் களத்தில் அலுப்புத் தட்டாத ஒரு முழு நீள நகைச்சுவைப் படத்தைத் தந்திருக்கிறார் நவீத் எஸ்.ஃபரீத் என்பது குறிப்பிடத்தக்கது.