இலங்கை
வீதியை விட்டு விலகி கவிழ்ந்த ஹயஸ் வான்: சாரதிக்கு ஏற்பட்ட நிலை
வீதியை விட்டு விலகி கவிழ்ந்த ஹயஸ் வான்: சாரதிக்கு ஏற்பட்ட நிலை
கொழும்பிலிருந்து கிளிநொச்சி நோக்கி வந்த ‘ஹயஸ்’ ரக வேன் வாகனம் ஒன்று, வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. முல்லைத்தீவு பனிக்கன்குளம் பகுதியில் விபத்து இடம்பெறுளள்து.
கொழும்பு நோக்கிப் பயணிகளை ஏற்றிச் சென்ற குறித்த வாகனம், அவர்களைக் கொழும்பில் இறக்கிவிட்டு மீண்டும் கிளிநொச்சி நோக்கித் திரும்பிக்கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது, வாகனத்தில் சாரதி மாத்திரமே இருந்துள்ளார். அவர் சிறிய காயங்களுடன் தப்பியுள்ளார்.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த மாங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
லங்கா4 (Lanka4)
அனுசரணை