இலங்கை

8,547 அரச வெற்றிடங்களை நிரப்ப அனுமதி வழங்கிய அமைச்சரவை !

Published

on

8,547 அரச வெற்றிடங்களை நிரப்ப அனுமதி வழங்கிய அமைச்சரவை !

பல்வேறு திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களில் உள்ள 8,547 வெற்றிடங்களை நிரப்புவதற்கு அனுமதி வழங்குவதற்காக பிரதமர் சமர்ப்பித்த பிரேரணைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

அரசாங்க சேவைக்கு ஆட்சேர்ப்புச் செய்யும் செயன்முறையை மதிப்பாய்வு  செய்வதன் மூலம் தேவைகள், முன்னுரிமைகள் ஆகியவற்றை இனங்கண்டு, அத்தியாவசியமாக மேற்கொள்ளப்பட வேண்டிய ஆட்சேர்ப்பு அளவுகள் குறித்து தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக, பிரதமரின் செயலாளர் தலைமையில் அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்றை நியமிப்பதற்கு கடந்த ஆண்டு அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது. 

Advertisement

அதற்கமைய அந்தந்த அமைச்சுகளின் கீழ் உள்ள திணைக்களங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களில் நிலவும் பதவிகளில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்காக குறித்த குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கைகளை கருத்திற்கொண்டு, கடந்த 02-10-2025 அன்று நடைபெற்ற குழுவின் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளின்படி, பல்வேறு அமைச்சுகளின் கீழ் உள்ள சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்கு அனுமதி வழங்குமாறு கோரி பிரதமரால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை தற்போது ஒப்புதல் அளித்தது.

 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version