பொழுதுபோக்கு
அவரு தப்பா பாடுனாலும் நல்லாருக்கும்; அதனால திருத்த மாட்டாங்க; தனுஷ் அப்பாவிடம் யுகபாரதி சொன்ன பாடகர் யார்?
அவரு தப்பா பாடுனாலும் நல்லாருக்கும்; அதனால திருத்த மாட்டாங்க; தனுஷ் அப்பாவிடம் யுகபாரதி சொன்ன பாடகர் யார்?
பிரபல பாடலாசிரியரும், கவிஞருமான யுகபாரதி ’ஆனந்தம்’ படத்தில் இடம்பெற்றிருந்த ’பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம்’ பாடல் மூலம் தமிழ் திரையுலகில் பாடலாசிரியராக அறிமுகம் ஆனார். பிரேம்குமார் என்ற இயற்பெயர் கொண்ட இவர் யுகபாரதி என்ற பெயரில் பாடல்கள் எழுதி வருகிறார். பாடலாசிரியர் யுகபாரதி பத்திரிகைகளில் பல கவிதைகள் எழுதியுள்ளார். ஆனந்தம் படத்திற்கு பிறகு இவர் பெரிதாக கவனிக்கப்படவில்லை. இதையடுத்து, ‘மைனா’ திரைப்படம் யுகபாரதி கெரியருக்கு மிகப்பெரும் மையில் கல்லாக அமைந்தது. இப்படத்தில் இடம்பெற்றிருந்த ’மைனா மைனா நெஞ்சுக்குள்ளே’, ’சிங் சிக்கா’ பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் ஒலித்தது. அதன் பிறகு ’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ’ரஜினிமுருகன்’, ’றெக்க’, ’கும்கி’, ’கயல்’, ’விஸ்வாசம்’, ’அண்ணாத்த’, ’வெள்ளைக்கார துரை’, ’மருது’ உள்ளிட்ட பல படங்களில் மக்கள் கொண்டாடும் பாடல்களை கொடுத்திருந்தார். பல இசையமைப்பாளர்களுடன் யுகபாரதி பணியாற்றி இருந்தாலும் இமான் – யுகபாரதி கூட்டணி என்றும் தனித்துவமாக அமைந்தது. பாடலாசிரியர் யுகபாரதி ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். இந்நிலையில், பாடலாசிரியர் யுகபாரதி, பாடகர் உதித் நாராயணன் குறித்து இயக்குநர் கஸ்தூரி ராஜா உடனான நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார். அவர் கூறியதாவது, “உதித் நாராயணன் தப்பா பாடினால் நல்லா இருக்கும் என்பதற்காகவே யாரும் திருத்தமாட்டார்கள். இதுதான் தமிழ் சினிமாவில் இருப்பது. இந்த உண்மை யாருக்கும் தெரியாது முதல் முறையாக அதை நாம் ஓபன் செய்துவிட்டோம். அப்பறம் பருவா நகி என்பது பரவாயில்லை என்பதற்கான இந்தி வார்த்தை. உதித் நாராயணன் திரும்ப திரும்ப என்ன நினைத்துவிட்டார் பரவாயில்லை என்பதை இந்தி வார்த்தை என்று நினைத்துவிட்டார். அவர் இந்தியில் எழுதி பாடுவதால் அந்த பரவாயில்லை வரவே இல்லை. இது ஒரு முக்கியமான விஷயம். அதுபோன்று இந்தி பாடகர்கள் இங்கு வந்து பாட வரும் பொழுது இதுபோன்று நிறைய பிரச்சனைகள் வரும். அதில், நான் பார்த்து ரசித்தது ஸ்ரேயா கோஷல் தான். ஒரே ஒரு முறை சொன்னால் போதும் அதை சட்டென்று புரிந்து கொண்டு பாடுவார். அவர் என்னுடைய பாடல்கள் ஒரு 60 பாடல்கள் பாடியுள்ளார். எந்த இடத்திலும் தவறாகவே இருக்காது. மிகவும் சரியாக பாடக் கூடியவர் ஸ்ரேயா கோஷல்” என்றார்.