சினிமா

இனி அவ்வாறு பயன்படுத்த வேண்டாம்.. நடிகை பிரியாமணி பேச்சால் பரபரப்பு!

Published

on

இனி அவ்வாறு பயன்படுத்த வேண்டாம்.. நடிகை பிரியாமணி பேச்சால் பரபரப்பு!

பருத்திவீரன் படத்தின் மூலம் முத்தழகாக மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருப்பவர் நடிகை பிரியாமணி. தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் கன்னடத்தில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொண்டார்.இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பிரியாமணி பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.அதில், ” பான் இந்தியா என்ற சொல்லைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். நாம் அனைவரும் இந்தியர்கள்.அப்படி இருக்கும்போது எதற்காக அந்த வார்த்தை? இந்தி நடிகர் தென்னிந்திய படங்களில் நடித்தால் அவரை தென்னிந்திய நடிகர் என்று சொல்கிறோமா? ரஜினி, கமல், தனுஷ் போன்றவர்கள் பல மொழிகளில் நடிக்கிறார்கள்.அவர்களை யாருமே பான் இந்தியா நடிகர்கள் என்று சொல்லவில்லையே. மொழி முக்கியமல்ல, நடிக்கும் கதாபாத்திரங்கள் தான் முக்கியம். பான் இந்தியா என்ற வார்த்தையை இனி பயன்படுத்த வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version