இலங்கை

இலங்கையில் முதியோர் தொகை அதிகரித்து வருகிறது!

Published

on

இலங்கையில் முதியோர் தொகை அதிகரித்து வருகிறது!

ஆசிய பிராந்தியத்தில் முதியோர் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் அதிகமாக உள்ள நாடுகளில் ஒன்றாக இலங்கை அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

 2012 ஆம் ஆண்டில் நாட்டின் முதியோர் மக்கள் தொகை 12 சதவீதமாக இருந்தது என்றும், 2024 ஆம் ஆண்டில் அது 18 சதவீதமாக அதிகரித்துள்ளது என்றும் சமூக சுகாதார நிபுணர் டாக்டர் நிஷானி உபயசேகர தெரிவித்தார்.

Advertisement

 சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய சமூக சுகாதார நிபுணர் டாக்டர் நிஷானி உபயசேகர,

“இலங்கையில் 2012 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மக்கள் தொகையில் 12% பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள். 2024 மக்கள் தொகை கணக்கெடுப்பில், முதியோர் மக்கள் தொகை 18% ஆக அதிகரித்துள்ளது. 

2040 ஆம் ஆண்டுக்குள், இந்த மக்கள் தொகையில் 25%, அதாவது நான்கு பேரில் ஒருவர், முதியவர்களாக இருப்பார்கள் என்று நாங்கள் கணித்துள்ளோம். ஆசியாவில் இதே போன்ற நாடுகளை எடுத்துக் கொண்டால், அது அதிக முதியோர் மக்கள் தொகை வளர்ச்சி விகிதத்தைக் கொண்ட நாடாக அடையாளம் காணப்பட்டுள்ளது. 

Advertisement

இதற்கு பல காரணங்கள் உள்ளன. பிறக்கும் போது ஆயுட்காலம் அதிகரித்ததாலும், புதிய பிறப்புகளின் எண்ணிக்கை குறைந்ததாலும் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார். 

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version