பொழுதுபோக்கு
உன் தராதரத்திற்கு நீ அப்படி தான் பேசுவ… வார்த்தையைவிட்ட திவாகர்; கொந்தளித்த போட்டியாளர்கள்
உன் தராதரத்திற்கு நீ அப்படி தான் பேசுவ… வார்த்தையைவிட்ட திவாகர்; கொந்தளித்த போட்டியாளர்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9-வது சீசன் கடந்த அக்டோபர் 5-ந் தேதி பிரமாண்டமாக தொடங்கியது. வழக்கமாக பிரபலங்கள் பிக்பாஸ் போட்டியாளர்களாக வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமூக வலைதளங்களில் பிரபலமான நபர்கள் பிக்பாஸில் போட்டியாளர்களாக நுழைந்தது மக்களுக்கு சற்று ஏமாற்றத்தை அளித்தது. இந்நிகழ்ச்சி குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்தாலும் பிக்பாஸ் வீட்டில் என்ன நடக்கிறது என்று ரசிகர்கள் ஆவலுடன் கவனித்து வருகின்றனர்.பிக்பாஸ் சீசன் 9 போட்டியாளர்கள் பட்டியல் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் போட்டியாளர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதை மறந்து தொடர்ந்து சண்டை போட்டு வருகின்றனர். ஒவ்வொரு நாளும் என்ன பிரச்சனை வெடிக்கும் என்ற கோணத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி நடந்து வருகிறது. 20 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்கு சென்ற நிலையில் நந்தினி தன்னால் பிக்பாஸ் வீட்டில் இருக்க முடியாது என்று சொல்லிவிட்டு வெளியேறிவிட்டார். இதையடுத்து, முதல் வார நாமினேஷனில் பிரவீன் காந்தி வெளியேறினார்.தொடர்ந்து, அப்சரா சி.ஜே, ஆதிரை ஆகியோர் வெளியேறினர். பிக்பாஸ் வீட்டில் உள்ள அனைவருமே தங்களின் சுயரூபத்தை காட்டவில்லை என்பதே மக்களின் கருத்தாக உள்ளது. அதுமட்டுமல்லாமல், எப்போதும் இல்லாத அளவு சீசன் 9-ன் டி.ஆர்.பி ரேட்டிங்கும் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே உள்ளே இருக்கும் போட்டியாளர்களுக்கு சார்பிரைஸ் கொடுக்கும் விதமாகவும், போட்டியை பரபரப்பாக்கும் திட்டத்துடன் பிக்பாஸ் தற்போது அடுத்தடுத்து சில வைல்டு கார்டு போட்டியாளர்களை உள்ளே இறக்கியுள்ளனர். #Day25#Promo1 of #BiggBossTamilBigg Boss Tamil Season 9 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason9#OnnumePuriyala#BiggBossSeason9Tamil#BiggBoss9#BiggBossSeason9#VijaySethupathi#BiggBossTamil#BB9#BiggBossSeason9#VijayTV#VijayTelevisionpic.twitter.com/PksVTuBUiMஅதன்படி, பாக்யலட்சுமி, மகாநதி, அன்னம் போன்ற தொடர்களில் நடித்த திவ்யா கணேஷ், வைல்டு கார்டு போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல உள்ளார். மேலும், நடிகர் பிரஜின் அவரது மனைவி சாண்ட்ரா மற்றும் நடிகர் அமித் ஆகியோரும் வைல்டு கார்டு எண்ட்ரியில் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல உள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது. இவர்கள் வருகை பிக்பாஸ் நிகழ்ச்சியை மேலும் பரபரப்பாக்கும் என்றும் ஏற்கனவே இருக்கும் போட்டியாளர்களின் சுயரூபத்தை வெளியே கொண்டு வரும் என்றும் கூறப்படுகிறது.இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 25-ஆம் நாளின் முதல் ப்ரொமோ வெளியாகியுள்ளது. அதில், இந்த வீட்டில் திண்குறது, தூங்குறது மறுபடியும் அதே பண்றது யாரு என்று பிக்பாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு ரம்யா ஜோ, பாருவையும் திவாகரையும் குறிப்பிடுகிறார். நீங்களும் தூங்கிட்டுதான் இருக்கீங்க 24 மணிநேரமும் என்று திவாகர், ரம்யா ஜோவை சொல்கிறார். இதனால் இருவருக்கும் இடையில் பிரச்சனை வெடிக்கிறது. அப்போடு திவாகர் உன் தராதரத்திற்கு நீ அப்படி தான் பேசுவ என்கிறார். இதனால் கடுப்பான சபரி, திவாகருடன் சண்டைப்போடுகிறார். இத்துடன் இந்த வீடியோ முடிவடைகிறது.