இலங்கை
கடலில் மிதந்து வந்த மர்ம திரவத்தை அருந்திய இருவர் பலி!
கடலில் மிதந்து வந்த மர்ம திரவத்தை அருந்திய இருவர் பலி!
புத்தளம், நாரக்கல்லி பிரதேசத்தில் கடற்றொழிலாளர்களின் வாடியில் நான்கு பேர் இருந்துள்ள நிலையில், இருவர் ஒருவகை திரவத்தை அருந்திய நிலையில் உயிரிழந்துள்ளனர். கடலில் இருந்து மிதந்து வந்த மர்ம போத்தலொன்றில் இருந்த திரவத்தையே அவர்கள் அருந்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது. அந்தத் திரவத்தை அருந்திய நிலையில், ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
ஏனைய மூவரும் புத்தளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், அவர்களில் இன்னொருவரும் உயிரிழந்துள்ளார். மற்றைய இருவரும் தற்போதும் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பில் புத்தள பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.