பொழுதுபோக்கு

கருணாநிதி நேரடி சிபாரிசு; விவேக் ‘சின்ன‌ கலைவாணர்’ பட்டம் வாங்க பெரியார் காமெடி தான் காரணமா?

Published

on

கருணாநிதி நேரடி சிபாரிசு; விவேக் ‘சின்ன‌ கலைவாணர்’ பட்டம் வாங்க பெரியார் காமெடி தான் காரணமா?

1987-ம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான ‘மனதில் உறுதி வேண்டும்’ என்ற படத்தின் மூலம் திரையுலகில் நடிகராக அறிமுகமானவர் விவேக். அதனைத் தொடர்ந்து, ரஜினிகாந்த், விஜயகாந்த், சரத்குமார், கார்த்திக் தொடங்கி, விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ் உள்ளிட்ட இன்றைய தலைமுறை நடிகர்கள் பலருடன் இணைந்து காமெடியில் கலக்கியுள்ளார். குறிப்பாக தனுஷூடன் இணைந்து நடித்த சில படங்கள் பெரிய வெற்றிப்படங்களாக அமைந்துள்ளது.தனுஷ் – விவேக் கூட்டணியில் வெளியான முதல் படம் படிக்காதவன். இந்த படத்தின் காமெடி காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், விவேக்கின் அசால்ட் ஆறுமுகம் கேரக்டர் இன்றும் மக்கள் மத்தியில் பேசப்படக்கூடிய ஒரு கேரக்டராக நிலைத்திருக்கிறது. 2009-ம் ஆண்டு இந்த படம் வெளியான நிலையில், 2010-ம் ஆண்டு இந்த கூட்டணியில் வெளியான படம் உத்தமபுத்திரன். இந்த படத்திலும் விவேக் காமெடி பெரிதும் பேசப்பட்டது.நடிகர் விவேக் தனுடைய படங்களில் நடிப்பு மட்டுமல்லாமல் பல சமூக கருத்துகள் தொடர்பான டயலாக்கையும் பேசுவார். உதாரணத்திற்கு கடந்த 2000-ஆம் ஆண்டு வெளியான திருநெல்வேலி படத்தில் ’நூறு பெரியார் வந்தாலும் உங்களை எல்லாம் திருத்த முடியாது’ என்ற காமெடி எல்லாம் படு ஹிட்டடித்தது. இன்று வரையிலும் அந்த காமெடிகள் பேசப்பட்டு வருகின்றன. இந்நிலையில், விவேக்கிற்கு சின்ன கலைவாணர் பட்டம் எப்படி கிடைத்தது என்று இயக்குநர் பாரதி கண்ணன் நேர்காணல் ஒன்றில் மனம் திறந்துள்ளார்.அவர் பேசியதாவது, “திருநெல்வேலி படத்தை கலைஞருக்கு போட்டு காண்பித்தோம். அப்போது கலைஞர் பெரியார் விஷயத்தை எல்லாம் பெரிதாக படத்தில் பேசியிருக்கிறீர்கள் என்று சொன்னார். அதன்பின்னர் வீரமணி சாருக்கு போன் செய்து உங்கள் விஷயத்தை பெரிதாக பண்ணியிருக்கிறார் விவேக்கிற்கு ஒரு அவர்ட் கொடுங்க என்று கலைஞர் சிபாரிசு செய்தார்.  விவேக்கிற்கு ’சின்ன கலைவாணர்’ விருது என் படத்தில் தான் கிடைத்தது. அது யாருக்கும் தெரியாது. திரிநெல்வேலி படத்தில் ஆயிரம் பெரியார் வந்தாலும் உங்களை திருத்த முடியாது என்று காமெடி வரும் அதன் பேசிங் பாயிண்ட் என்னவென்றால் நான் எம்.ஆர்.ராதா ரசிகன் என்பதால் அந்த டைப்பில் ஒரு டிராக் பண்ண வேண்டும் என்று பண்ணியதுதான். விவேக் ஒரு சீன் சொல்வார். நானும் சொல்வேன் அப்படி எல்லாம் வைத்து பண்ணியதுதான் அந்த படம். அந்த படத்தின் மூலம் விவேக்கிற்கு ஒரு பெரிய வாழ்க்கை கிடைத்தது. அதேபோன்று வடிவேலுவிற்கு சூனாபானா கதாபாத்திரம் பெரிய ஹிட்டானது” என்றார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version