உலகம்
கென்யாவில் விமான விபத்து; 11 பேர் சாவு!
கென்யாவில் விமான விபத்து; 11 பேர் சாவு!
கென்யாவின் குவாலே பகுதியில், இந்தியப் பெருங்கடலின் கரையோரத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற சிறிய விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது.
குறித்த விபத்தில் விமானத்தில் பயணித்த 11 பேரும் உயிரிழந்துள்ளனர். விமானத்தில் எட்டு ஹங்கேரியரும், இரண்டு ஜெர்மனியரும், கென்யாவைச் சேர்ந்த ஓர் விமானி என மொத்தம் 11 பேர் பயணித்திருந்ததாகவும், யாரும் உயிர் தப்பவில்லை என மொம்பாசா ஏர் சஃபாரி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்தைப் பார்வையிட்ட பொலிஸார், விபத்து குறித்து கென்ய விமான படையினருடன் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.