இலங்கை

கை நீட்டிய நீதிமன்ற அலுவலக உதவியாளருக்கு நேர்ந்த கதி

Published

on

கை நீட்டிய நீதிமன்ற அலுவலக உதவியாளருக்கு நேர்ந்த கதி

  10,000 ரூபாய் பணத்தை இலஞ்சமாகக் கோரி, பெற்றுக்கொண்ட நீதிமன்ற அலுவலக உதவியாளர் ஒருவர் இலஞ்சக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

சந்தேக நபர், ஒரு வழக்கு அறிக்கையின் சான்றளிக்கப்பட்ட பிரதியொன்றை வழங்குவதற்காக 10,000 ரூபாய் பணத்தை இலஞ்சமாகக் கோரியுள்ளார்.

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் இன்று (29) காலை 10.26 மணியளவில் வாழைத்தோட்டம் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் முன்னால் வைத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபர், கொழும்பு 12, மாவட்ட நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளராக கடமையாற்றியவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

கைதான சந்தேகநபர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version