இலங்கை

சிறைக்குள் உயிர்மாய்த்துக்கொண்ட கைதி ; தீவிரமாகும் விசாரணை

Published

on

சிறைக்குள் உயிர்மாய்த்துக்கொண்ட கைதி ; தீவிரமாகும் விசாரணை

குளியாப்பிட்டிய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதியொருவர் நேற்று (29) பிற்பகல் தான் அணிந்திருந்த சாரத்தால் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சந்தேகநபர் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதை அறிந்த சிறைச்சாலை அதிகாரிகள் உடனடியாக அவரை வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், அவர் அதற்கு முன்பே உயிரிழந்து விட்டதாக குளியாப்பிட்டிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Advertisement

இவ்வாறு உயிரிழந்தவர் எரேபொல சிறிபெல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் மீது கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அதற்கமைய, குறித்த சந்தேகநபர் கொள்ளைச் சம்பவம் ஒன்று தொடர்பான அடையாள அணிவகுப்புக்காக முன்னிலைப்படுத்தப்படவிருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

உயிரிழந்த சந்தேகநபரின் சடலம் தற்போது குளியாப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், நீதவான் விசாரணைகள் மற்றும் பிரேத பரிசோதனைகள் இடம்பெறவுள்ளன.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version