டி.வி

தகுதி, தராதரம்னு பேசிய திவாகரை வெளுத்து வாங்கிய ரம்யா.! சபரியின் குரூப்பிசம்

Published

on

தகுதி, தராதரம்னு பேசிய திவாகரை வெளுத்து வாங்கிய ரம்யா.! சபரியின் குரூப்பிசம்

பிக் பாஸ்  நிகழ்ச்சியின் 25வது  நாளான  இன்று  முதலாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் ரம்யா ஜோவும் திவாகரனும் போட்ட சண்டை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கடந்த அக்டோபர் ஐந்தாம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக் பாஸ் வீட்டில் மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்தனர். அதில் நந்தினி, பிரவீன் காந்தி, அப்சரா,  ஆதிரை ஆகியோர் வெளியேற,  16 பேர் பிக் பாஸ் வீட்டில் தற்போது காணப்படுகின்றனர்.இதைத்தொடர்ந்து வைல்டு கார்டு என்ட்ரியாக பிரஜின் – சாண்ட்ரா ஜோடி சென்றுள்ளனர்.. அவர்கள் சரி உள்ளே சென்று சிறந்த கன்டென்ட் கொடுப்பார்களா என்ற கேள்வி தற்போது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த நிலையில், தற்போது வெளியான ப்ரோமோவில், சாப்பிடுறது, தூங்கிறது திரும்ப அதே பண்ணுவது யார் என்று பிக் பாஸ் கேள்வி கொடுக்க, அதனை வாசித்த வினோத்தும் ரம்யாவும் திவாகர், பார்வதியை சொல்லுகின்றனர். இதைக் கேட்ட திவாகர் அவங்களே 24 மணிநேரமும் தூங்கிட்டு தான் இருக்காங்க என்று சொல்ல, ரம்யா கோபத்தில் கத்துகிறார்.மேலும் உன்ன மாதிரியா நான்? நீ ஒரு ஆளு, உங்கிட்ட பேசிட்டு சீ..போ.. என்று ரம்யா சொல்லி செல்ல, உன்கிட்ட தராதரம் தெரியாம பேசிட்டேன் என்று திவாகர் சொல்லுகிறார்.இதை கேட்ட சபரி, என்ன தராதரம், தகுதினு பேசுற என்று திவாகருக்கு கத்த, சபரி குரூப்பிசம் பண்ணாத என்று திவாகர் சொல்லுகிறார். ஆனால் என் தங்கச்சிக்காக பேசுவது குரூப்பிசம் என்றால் நான் அப்படி தான் பேசுவேன் என சபரி சொல்லுகிறார்.   

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version