பொழுதுபோக்கு
தியேட்டரில் சுமார்… ஆனா ஓ.டி.டி-யில் டாப்; அதிக வியூஸ் அள்ளிய படங்கள் இவைதான்; இந்த வாரம் மிஸ் பண்ணாதீங்க!
தியேட்டரில் சுமார்… ஆனா ஓ.டி.டி-யில் டாப்; அதிக வியூஸ் அள்ளிய படங்கள் இவைதான்; இந்த வாரம் மிஸ் பண்ணாதீங்க!
ஒவ்வொரு வாரம் ஓ.டி.டி தளங்களில் பல்வேறு ஜானர்களில் படங்கள் மற்றும் வெப் தொடர்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இன்றைய காலக்கட்டத்தில் திரையரங்கிற்கு சென்று படம் பார்க்கும் ரசிகர்களை விட ஓ.டி.டி-யில் படம் பார்க்கும் ரசிகர்கள் தான் அதிகமாக உள்ளனர். சில திரைப்படங்கள் திரையரங்கில் சுமார் வெற்றியை பெற்றாலும் ஓ.டி.டி-யில் ட்ரெண்டிங்கில் இணைகிறது. அப்படி இந்த வாரம் திரையரங்கில் சுமார் வெற்றியை பெற்று ஓ.டி.டி-யில் ட்ரெண்டிங்கில் இணைந்த திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம். வார் 2அயன் முகர்ஜி இயக்கத்தில் ஹிருத்திக் ரோஷன், ஜுனியர் என்.டி.ஆர், கியாரா அத்வானி ஆகியோர் நடிப்பில் வெளியான ‘வார் 2’ திரைப்படம் சமீபத்தில் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி-யில் வெளியானது. கடந்த வாரம் ஓ.டி.டி-யில் அதிக வியூஸ் அள்ளிய திரைப்படங்களின் பட்டியலில் 5-ம் இடத்தில் ‘வார் 2’ திரைப்படம் உள்ளது. அதிரடி அசத்தல் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த இப்படம், கடந்த வாரம் 15 லட்சம் பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.சக்தித் திருமகன் அருவி பட இயக்குநர் அருண் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடித்த திரைப்படம் ‘சக்தித் திருமகன்’. இப்படம் கடந்த மாதம் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றது. தொடர்ந்து, ஹாட் ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் வெளியான நிலையில் கடந்த வாரம் மட்டும் சுமார் 17 லட்சம் பார்வையாளர்களை ஈர்த்துள்ளது. ‘சக்தித் திருமகன்’ திரைப்படம் அரசியல் களத்தை விவரிக்கிறது.பரம சுந்தரிஇயக்குநர் துஷார் ஜலோடா இயக்கத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா, ஜான்வி கபூர் நடிப்பில் ஹிந்தியில் வெளிவந்த ரொமான்டிக் திரைப்படம் ‘பரம சுந்தரி’. இப்படம் ஆகஸ்ட் 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதையடுத்து சமீபத்தில் அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் ரிலீசான இப்படம், கடந்த வாரம் மட்டும் சுமார் 19 லட்சம் பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.கிரேட்டர் காலேஷ்இயக்குநர் ஆதித்யா சண்டியோக் இயக்கத்தில் இந்தியில் வெளிவந்த ஃபேமிலி டிராமா திரைப்படம் ’கிரேட்டர் காலேஷ்’ (Greater Kalesh). இப்படம் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் அக்டோபர் 17-ஆம் தேதி ரிலீஸானது. இந்நிலையில், ’கிரேட்டர் காலேஷ் திரைப்படம் கடந்த வாரம் மட்டும் சுமார் 20 லட்சம் பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.