இலங்கை
திருகோணமலையில் வாகனங்கள் மோதி கோர விபத்து; அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி
திருகோணமலையில் வாகனங்கள் மோதி கோர விபத்து; அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி
திருகோணமலை உட்துறைமுக வீதியில் இன்று (30) காலை மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
கார் – பட்டா – மோட்டார் சைக்கிள் ஆகிய மூன்று வாகனங்களே ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயங்களுடன் திருகோணமலை வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து குறித்து, மேலதிக விசாரணைகளை திருகோணமலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.