இலங்கை

துஸ்பிரயோகம் செய்ய கடத்தி செல்லப்பட்ட சிறுமிக்கு நடுவீதியில் நடந்த சம்பவம் ; துடிதுடித்து பிரிந்த உயிர்

Published

on

துஸ்பிரயோகம் செய்ய கடத்தி செல்லப்பட்ட சிறுமிக்கு நடுவீதியில் நடந்த சம்பவம் ; துடிதுடித்து பிரிந்த உயிர்

கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் மாவட்டம் ஒசக்கோட்டை அருகே உள்ள கிராமத்தில் 14 வயது சிறுமி ஒருவர்  பள்ளிக்கு சென்ற சிறுமி மாலை வெகு நேரமாகியும் வீட்டுக்கு திரும்பி வரவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், சிறுமியை பல இடங்களில் தேடி பார்த்தனர். எங்கு தேடியும் அவள் கிடைக்கவில்லை. இதுபற்றி சிறுமியின் பெற்றோர்  பொலிஸில் புகார் அளித்தனர். அப்போது ஒசக்கோட்டை பொலிஸில் இருந்து சிறுமியின் பெற்றோருக்கு அழைப்பு வந்தது.

Advertisement

இதன் போது பொலிஸார் விபத்தில் சிக்கி உங்கள் மகள் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் கதறி அழுதனர். மேலும் தங்கள் மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக அவளது பெற்றோர் ஒசக்கோட்டை பொலிஸார் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் பொலிஸார் விசாரணையை தொடங்கினார்கள்.

இந்த நிலையில்  நடத்திய விசாரணையில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது சிறுமியை பலாத்காரம் செய்ய கடத்தி சென்றபோது மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி, அவள் பலியானது தெரியவந்தது.

இதுதொடர்பாக ஒசக்கோட்டை பொலிஸார் விசாரணை நடத்தி சிறுமியை கடத்தி சென்றதாக 4 வாலிபர்களை கைது செய்துள்ளனர்.

Advertisement

விசாரணையில், அவர்கள் ஒசக்கோட்டையை சேர்ந்த சிறுவன் உள்ளிட்ட குழு என்பது தெரியவந்தது. குறித்த சிறுமி பேருந்துக்காக காத்திருந்தபோது அஜய் தனது நண்பர்களுடன் மோட்டார் சைக்கிள்களில் அங்கு வந்துள்ளார்.

அப்போது சிறுமியை பலாத்காரம் செய்வதற்காக பஸ் நிறுத்தத்தில் இருந்து அவளை கடத்தி சென்றுள்ளனர்.

சிறுமி அவர்களிடம் இருந்து தப்பிக்க முயன்றதால்,  ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கியது.

Advertisement

இதில் பலத்த காயம் அடைந்த சிறுமி உயிரிழந்துள்ளார்.

 ஏனையவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version