பொழுதுபோக்கு
நடுவுல இந்த ட்ராக் தேவயில்ல… இது டெவலப் ஆகாது; பார்வதி பதிலால் மனமுடைந்த கம்ருதீன்
நடுவுல இந்த ட்ராக் தேவயில்ல… இது டெவலப் ஆகாது; பார்வதி பதிலால் மனமுடைந்த கம்ருதீன்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9-வது சீசன் கடந்த அக்டோபர் 5-ந் தேதி பிரமாண்டமாக தொடங்கியது. வழக்கமாக பிரபலங்கள் பிக்பாஸ் போட்டியாளர்களாக வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமூக வலைதளங்களில் பிரபலமான நபர்கள் பிக்பாஸில் போட்டியாளர்களாக நுழைந்தது மக்களுக்கு சற்று ஏமாற்றத்தை அளித்தது. இந்நிகழ்ச்சி குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்தாலும் பிக்பாஸ் வீட்டில் என்ன நடக்கிறது என்று ரசிகர்கள் ஆவலுடன் கவனித்து வருகின்றனர்.பிக்பாஸ் சீசன் 9 போட்டியாளர்கள் பட்டியல் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் போட்டியாளர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதை மறந்து தொடர்ந்து சண்டை போட்டு வருகின்றனர். ஒவ்வொரு நாளும் என்ன பிரச்சனை வெடிக்கும் என்ற கோணத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி நடந்து வருகிறது. 20 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்கு சென்ற நிலையில் நந்தினி தன்னால் பிக்பாஸ் வீட்டில் இருக்க முடியாது என்று சொல்லிவிட்டு வெளியேறிவிட்டார். இதையடுத்து, முதல் வார நாமினேஷனில் பிரவீன் காந்தி வெளியேறினார்.தொடர்ந்து, அப்சரா சி.ஜே, ஆதிரை ஆகியோர் வெளியேறினர். பிக்பாஸ் வீட்டில் உள்ள அனைவருமே தங்களின் சுயரூபத்தை காட்டவில்லை என்பதே மக்களின் கருத்தாக உள்ளது. அதுமட்டுமல்லாமல், எப்போதும் இல்லாத அளவு சீசன் 9-ன் டி.ஆர்.பி ரேட்டிங்கும் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே உள்ளே இருக்கும் போட்டியாளர்களுக்கு சார்பிரைஸ் கொடுக்கும் விதமாகவும், போட்டியை பரபரப்பாக்கும் திட்டத்துடன் பிக்பாஸ் தற்போது அடுத்தடுத்து சில வைல்டு கார்டு போட்டியாளர்களை உள்ளே இறக்கியுள்ளனர். அதன்படி, பாக்யலட்சுமி, மகாநதி, அன்னம் போன்ற தொடர்களில் நடித்த திவ்யா கணேஷ், வைல்டு கார்டு போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல உள்ளார். மேலும், நடிகர் பிரஜின் அவரது மனைவி சாண்ட்ரா மற்றும் நடிகர் அமித் ஆகியோரும் வைல்டு கார்டு எண்ட்ரியில் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல உள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது. இவர்கள் வருகை பிக்பாஸ் நிகழ்ச்சியை மேலும் பரபரப்பாக்கும் என்றும் ஏற்கனவே இருக்கும் போட்டியாளர்களின் சுயரூபத்தை வெளியே கொண்டு வரும் என்றும் கூறப்படுகிறது.#Kamrudin : I like you,ne enna like panranu nenachi na unta pazhaguren.#VJPaaru : Sila vishayangal intha edathula velipadutha vendamnu na nenaikiren.Velilayum ithu develop aha poradhu illa.Kazhati vittachu.Great 👏😎#BiggBossTamil9#BiggBossTamilSeason9pic.twitter.com/72N7Mv024gஇந்நிலையில், தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், நள்ளிரவு 12 மணிக்கு பார்வதியும், கம்ருதீனும் வீட்டினுள் இருந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். கம்ருதீன் ‘ஐ லைக் யூ’ நீ என்ன லைக் பண்றனு நெனச்சி பழகுறேன். இதுக்கு மேல நீ எப்படி என்ன பாக்குறனு தெரியல என்று பார்வதியிடம் சொல்கிறார். அதற்கு பார்வது இது ஒரு பப்ளிக் மீடியம். அதில், போட்டிகளின் போது நாம் ஒருவருக்கு ஒருவர் துணையாக நிற்க வேண்டும். இந்த இடத்தில் சில விஷயங்கள் வெளிப்படுத்த வேண்டாம் என்று நான் சொல்கிறேன். நடுவுல இந்த ட்ராக் தேவயில்ல. வெளியபோன இது டெவலப் ஆகப்போறதும் இல்ல என்று கூறுகிறார். இதனால் கம்ருதீன் சோகமாகுகிறார். இதனுடன் இந்த வீடியோ முடிவடைகிறது.