இலங்கை

நாளைமறுதினம் முதல் வெடிகொளுத்தத் தடை

Published

on

நாளைமறுதினம் முதல் வெடிகொளுத்தத் தடை

பருத்தித்துறை நகரசபை அதிரடி முடிவு

பருத்தித்துறை நகரசபை எல்லைக்குட்பட்ட பொதுஇடங்களில் நாளைமறுதினம் முதல் வெடி கொளுத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

பருத்தித்துறை நகரசபை முதல்வர் வின்சென் டீ போல் டக்ளஸ் போல் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் உள்தாவது:
பருத்தித்துறை நகரசபை எல்லைக்குட்பட்ட பொதுஇடங்களில் நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் வெடி கொளுத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்களுக்கு அசெளகரியங்களை ஏற்படுத்தும் வகையிலும் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலும் செயற்படும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பான அறிவுறுத்தல் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது என்றுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version