இலங்கை

நீதிமன்ற களஞ்சிய அறைக்குள் கைதி செய்த செயலால் அதிர்ச்சி

Published

on

நீதிமன்ற களஞ்சிய அறைக்குள் கைதி செய்த செயலால் அதிர்ச்சி

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்தில் உள்ள களஞ்சிய அறை ஒன்றில் இருந்து செயலிழந்த கைத்துப்பாக்கி ஒன்றைத் திருடிய குற்றச்சாட்டில் சிறைக் கைதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த துப்பாக்கியை திருடியவர் சுத்தம் செய்யும் கடமைக்காக நீதிமன்ற களஞ்சிய அறைக்கு அனுப்பப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Advertisement

திருட்டில் ஈடுபட்ட கைதி, வெலிக்கடைச் சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வருபவர்.

கல்கிஸ்ஸை நீதிமன்றத்தின் வழக்குப் பொருட்கள் அறையை சுத்தம் செய்த பின்னர், 9 மில்லிமீட்டர் ரகத்தைச் சேர்ந்த குறித்த துப்பாக்கியைத் திருடி, சிறைச்சாலை பேருந்தில் ஏறியுள்ளார்.

திருடப்பட்ட துப்பாக்கியை ஒரு பையில் போட்டு, சிறைச்சாலை பேருந்தின் இருக்கைக்கு அடியில் வைத்திருந்தபோது, சிறைச்சாலை அதிகாரிகளின் சோதனையின்போது அது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Advertisement

பிடிபட்ட கைதி தொடர்பில் சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version