சினிமா
மாதம் ரூ.6.50 லட்சம் பராமரிப்பு தொகை தர வேண்டும்.! மாதம்பட்டிக்கு ஜாய் விடுத்த கோரிக்கை
மாதம் ரூ.6.50 லட்சம் பராமரிப்பு தொகை தர வேண்டும்.! மாதம்பட்டிக்கு ஜாய் விடுத்த கோரிக்கை
மக்கள் மனதில் பரிச்சயமான பெயராக இருக்கும் மாதம்பட்டி ரங்கராஜ், தனது இயல்பான நடிப்பாலும், தனித்துவமான கதாபாத்திரங்களாலும் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர். தற்போது, அவரைச் சுற்றி எழுந்திருக்கும் தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை திரைப்பட உலகில் மட்டுமின்றி சமூக வலைத்தளங்களிலும் பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது.மாதம்பட்டி ரங்கராஜின் இரண்டாவது மனைவியாக அறியப்படும் ஜாய் கிரிஸில்டா, தற்போது நிறைமாத கர்ப்பிணி. இவர் தற்பொழுது மாதம்பட்டி தன்னை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி விட்டார் என்று வழக்கு ஒன்றினைத் தொடர்ந்து அந்த வழக்கு தற்பொழுது விசாரிக்கப்பட்டு வருகின்றது.இந்நிலையில், ஜாய் கிரிஸில்டா மீண்டும் ஒரு மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார். அதில், நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் தனக்கு மாதம்பட்டி ரங்கராஜ் மாதம் மாதம் பராமரிப்பு தொகை வழங்க கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். குறிப்பாக, வாடகை, மற்றும் இதர செலவுகளுக்காக மாதம் ரூ.6,50,000 வழங்க வேண்டும் என ஜாய் கிரிஸில்டா கோரிக்கை விடுத்துள்ளார்.கடந்த சில மாதங்களாக ஜாய் கிரிஸில்டாவுடனான உறவு மற்றும் திருமணத்திற்குப் பிறகு ஏற்பட்ட முரண்பாடுகள் குறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துக்கள் பரவி வருகின்றன. இந்த நிலைமையில் ஜாய் தற்பொழுது வெளியிட்ட கோரிக்கை அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.