இலங்கை
மூக்கால் குருதி வடிந்து பச்சிளம் குழந்தை சாவு!
மூக்கால் குருதி வடிந்து பச்சிளம் குழந்தை சாவு!
யாழ்ப்பாணம் – கீரிமலை- நல்லிணக்கபுரம் பகுதியில், மூன்று மாதக் குழந்தையொன்று திடீர் சுகவீனமுற்று குருதி வெளியேறி நேற்று உயிரிழந்துள்ளது. அரியதாஸ் கஜிஷ்ணவி என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
குறித்த குழந்தைக்குத் தாயார் பாலூட்டிய பின்னர் அந்தக் குழந்தை வாயாலும், மூக்காலும் குருதி வெளியேறி மயக்கமடைந்துள்ளது. இதையடுத்து, குழந்தையை தெல்லிப்பழை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது அந்தக் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.