பொழுதுபோக்கு
மெகாஹிட் படத்தில் ரஜினிக்கு மருமகள்; 3 சூப்பர் ஸ்டார்களுடன் நடித்த இந்த நடிகை யார் தெரியுமா?
மெகாஹிட் படத்தில் ரஜினிக்கு மருமகள்; 3 சூப்பர் ஸ்டார்களுடன் நடித்த இந்த நடிகை யார் தெரியுமா?
சினிமாவை பொறுத்தவரை ஒரு நடிகை, சில வெற்றிப்படங்கள் கொடுத்தாலும், முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்கும்போது அவர்களின் மார்கெட் உச்சத்திற்கு செல்லும். அந்த வகையில், நடிகர் ரஜினிகாந்துடன் அவரது மருமகளாக நடித்த ஒரு நடிகையின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.அந்த நடிகை வேறு யாரும் இல்லை. ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்தின் மருமகள் ஸ்வேதா கேரக்டரில் நடித்த மிர்னா மேனன் தான். கேரளா மாநிலம் இடுக்கி பகுதியை சேர்ந்த இவர், 2016-ம் ஆண்டு தமிழில் வெளியான பட்டதாரி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு களவானி மாப்பிள்ளை படத்தில் அட்டக்கத்தி தினேஷூட்ன நடித்திருந்தார். இந்த படத்தில் தேவயானி முக்கிய கேரக்டரில் நடித்தார். இதனையடுத்து மோகன்லால் நடிப்பில் கடந்த 2020-ம் ஆண்டு வெளியான பிக் பிரதர் என்ற படத்தின் மூலம் மலையாள திரைத்துறையில் அறிமுகமானார். கிரேஸி ஃபெல்லோ என்ற படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமான மிர்னா மேனன், உக்ரம் ஆகிய படங்களில் நடித்திருந்தார். நாகர்ஜுனாவுடன் நா சாமி ரங்கா என்ற படத்திலும் நடித்திருந்தார்.அதன்பிறகு ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் அவரது மருமகளாக நடித்த மிர்னா மேனன் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். நெல்சன் திலீப் குமார் இயக்கிய இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், தமன்னா உள்ளிட்ட நடிகைகள் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம் 600 கோடிக்கு மேல் வசூலித்து பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. தற்போது இந்த படத்தின் 2-ம் பாகம் தயாராகி வரும் நிலையில், அதிலும் மிர்னா மேனன் சுவேதா கேரக்டரில் நடித்து வருகிறார்.ஜெயிலர் படத்தை தொடர்ந்து ப்ரித்மார்க் என்ற தமிழ் படத்தில் நடித்த மிர்னா மேனன் சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் நிலையில், அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் கவனம் ஈர்த்து வரும் நிலையில், நம்ம ஜெயிலர் டைகர் முத்துவேல் பாண்டியன் மருமகளா இவர் என்று கேட்டு வருகின்றனர்.தமிழில் ரஜினிகாந்த், தெலுங்கில், நாகர்ஜூனா, மலையாளத்தில் மோகன்லால் என 3 சூப்பர்ஸ்டார்களுடன் நடித்துள்ள மிர்னா மேனன், தற்போது மீண்டும் ரஜினிகாந்துடன் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.