இலங்கை
யாழில் டெங்கு அபாயம் அதியுச்ச நிலை!
யாழில் டெங்கு அபாயம் அதியுச்ச நிலை!
நாட்டின் டெங்குத் தொற்றின் அபாயம் அதிகளவில் உள்ள பகுதிகளில், யாழ்ப்பாணம் மாவட்டமும் ஒன்றாகக் காணப்படுகின்றது என்று தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இந்த வருடத்தின் ஜனவரி மாதம் தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 41 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டெங்குத்தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 22 பேர் சிகிச்சையின் போது உயிரிழந்துள்ளனர்.
தற்போது 11 மாவட்டங்கள் டெங்கு அபாயம் அதிகம் உள்ள பகுதிகளாகக் காணப்படுகின்றன. இதன்படி, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, யாழ்ப்பாணம், இரத்தினபுரி, கண்டி, மட்டக்களப்பு, குருநாகல், கேகாலை ஆகிய மாவட்டங்கள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
பருவகால மழைவீழ்ச்சியைத் தொடர்ந்து 22 மாவட்டகளில் நுளம்பு பரவல் தீவிரமடைந்துள்ளது. எனவே, பொதுமக்கள் மிகவும் அவதானமாகச் செயற்பட வேண்டியது அவசியம் என்றுள்ளது.