இலங்கை

யாழில் பாலூட்டும் போது இறந்த மூன்றுமாதக் குழந்தை!

Published

on

யாழில் பாலூட்டும் போது இறந்த மூன்றுமாதக் குழந்தை!

யாழில், பிறந்து 3 மாதங்களோயான பெண் குழந்தை ஒன்று நேற்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

கீரிமலை – நல்லிணக்கபுரம் பகுதியை சேர்ந்த 3 மாதமேயான பெண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

Advertisement

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

 குறித்த குழந்தை கடந்த ஜூலை மாதம் 23ஆம் திகதி அன்று பிறந்துள்ளது. இன்றையதினம் தாயார் குறித்த குழந்தைக்கு பாலூட்டிய பின்னர் சிறிது நேரத்தில் மூக்காலும் வாயாலும் இரத்தம் வந்த நிலையில் குழந்தை மயங்கியது.

 பின்னர் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டவேளை குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

Advertisement

 குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

Advertisement

அனுசரணை

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version