இலங்கை

யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியில் 11.600 கிராம் ஹெரோய்னுடன் சந்தேகநபரொருவர் கைதானார்

Published

on

யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியில் 11.600 கிராம் ஹெரோய்னுடன் சந்தேகநபரொருவர் கைதானார்

யாழ்ப்பாணம் நகர்ப்பகுதியில், பதிவு செய்யப்படாத புத்தம்புதிய வாகனத்தில் பெருமளவு ஹெரோய்ன் கடத்திய குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ் மாவட்டகுற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. சந்தேகத்துக்கு இடமான வகையில் பயணித்த வாகனமொன்றை பொலிஸார் இடைமறித்துச் சோதனையிட்டபோதே, மேற்படி சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். அவரின் உடமையில் இருந்து 11 கிராம் 600 மில்லிகிராம் ஹெரோய்ன் மீட்கப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

குறித்த நபர் கைது நடவடிக்கையில் இருந்து தப்புவதற்காகப் பொலிஸாருக்கு பெருந்தொகை இலஞ்சம் வழங்க முயன்றார் என்றும், அவர் இதற்கு முன்னரும் ஹெரோய்னுடன் தொடர்புடைய வழக்கில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டவர் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version