இலங்கை

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இணைய வழிச் செயலிமூலம் இனி அபராதம் செலுத்தலாம்

Published

on

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இணைய வழிச் செயலிமூலம் இனி அபராதம் செலுத்தலாம்

யாழ்ப்பாணத்தில் இணையவழி செயலி மூலம்(GovPay) போக்குவரத்து அபராதம் செலுத்தும்முறை நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் நிலையத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. பொலிஸ் நிலையங்கள் அல்லது தபால் நிலையங்களுக்குச் செல்ல வேண்டிய அவசியமின்றி, போக்குவரத்து அபராதங்களை எளிதாகவும், விரைவாகவும், பாதுகாப்பாகவும் இணைய வழியில் செலுத்த அனுமதிப்பதன் மூலம் பொதுமக்களுக்கு அதிக வசதியை வழங்குவதே இந்த முயற்சியின் நோக்கமாகும் என பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

குறித்த நிகழ்வில் வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக்தனபால, யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மாரப்பண, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரிகள், போக்குவரத்துப் பொலிஸார் உட்படப் பலரும் கலந்துகொண்டனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version