இலங்கை
யாழ். பல்கலைக்கழக ஜனநாயக ஊழியர் சங்கத்தினர் ஒருநாள் வேலைநிறுத்தப் போர்
யாழ். பல்கலைக்கழக ஜனநாயக ஊழியர் சங்கத்தினர் ஒருநாள் வேலைநிறுத்தப் போர்
யாழ்ப்பாணப் பல்கலைகழக ஜனநாயக ஊழியர் சங்கத்தினர் பல்கலைக்கழக முன்றலில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளனர்.
மாணவர்களின் நலன்கருதி அத்தியாவசிய சேவைகளான பாதுகாப்புச்சேவைகள், நீர் வழங்கள் சேவைகள், பரீட்சைகள் என்பன பாதிப்படையாதவாறு அத்துறைகளில் கடமையாற்றும் சங்கத்தின் ஊழியர்களில் தேவையான உறுப்பினர்கள் மட்டும் சேவையாற்றிக்கொண்டு ஏனைய ஊழியர்கள் போராட்டத்தில் பங்காற்றுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது. முன்புவழங்கிய உறுதியின்படி, நியாயமான கோரிக்கைகளுக்கு ஓரிரு வாரங்களுக்குள் தீர்வு காணப்படாவிடில், தொடர்ச்சியான போராட்ட நடவடிக்கைகளுக்கு செல்லவேண்டிய நிலை ஏற்படும் எனவும் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.