பொழுதுபோக்கு

லேட் மேரேஜ், ஆனா லைப்ல எல்லாமே செஞ்சு முடிச்சிட்டேன்; காதல் மன்னன் நடிகை க்ளாசிக்கல் டான்சர் தெரியுமா?

Published

on

லேட் மேரேஜ், ஆனா லைப்ல எல்லாமே செஞ்சு முடிச்சிட்டேன்; காதல் மன்னன் நடிகை க்ளாசிக்கல் டான்சர் தெரியுமா?

கடந்த 1998-ம் ஆண்டு இயக்குனர் சரண் இயக்கிய திரைப்படம் ’காதல் மன்னன்’. இந்த படத்தில் அஜித், மானு, எம். எஸ். விஸ்வநாதன்,விவேக், கரண், கிரிஷ் கர்னாட், கனல் கண்ணன் ஆகியோர் நடித்திருந்தனர். இதில், கிரிஷ் கர்னாட்டின் முதல் மகள் கண்டிப்பாக வளர்த்து, தன்னை மீறி காதல் திருமணம் செய்து கொண்டதால், இளைய மகள் திலோத்தம்மாவை கடுமையான கட்டுப்பாடுகளோடு வளர்க்கிறார். தொடர்ந்து, பணக்கார இளைஞர் ஒருவருடன் திலோத்தம்மாவிற்கு நிச்சயதார்த்தமும் நடந்து விடுகிறது.அந்த நேரத்தில் தான் காதல் திருமணம் செய்து கொண்ட திலோத்தம்மாவின் அக்கா, தனது தங்கையிடம் தன்னுடைய குழந்தையுடன் இருக்கும் போட்டோவை கொடுக்கும் படி, ஹீரோ அஜித்தை அனுப்புகிறார். அக்கா புகைப்படம் பார்த்த உடன் தன் அக்காவை டெல்லி சென்று சந்திக்க உதவுமாறு அஜித்திடம் கேட்கிறார் நாயகி மானு. தந்தை கட்டுப்பாடுகளை சமாளித்து அக்கா மற்றும் குழந்தைகளை சந்திக்கவைத்த அஜித் மீது மானு மனதில் காதல் மலர்கிறது. அதன் பிறகு என்ன நடந்தது என்பது படம் பார்த்த அனைவருக்கும் தெரியும்.இப்படம் நடிகர் அஜித்திற்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்று தந்தது. அதிலும், திலோத்தம்மாவாக நடித்த மானு மீது ரசிகர்களுக்கு அப்படி ஒரு கிரேஸ் இருந்தது. ’காதல் மன்னன்’ திரைப்படம் பார்த்த ரசிகர்கள் இன்று வரையிலும் திலோத்தம்மாவை மறந்திருக்க மாட்டார்கள். ஒரே படத்தில் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் நாயகி மானு. ஆனால், இப்படத்தின் பிறகு அவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை. நடிகை மானு ஒரு சிறந்த பரத நாட்டிய கலைஞர் ஆவார். இவர் நடனத்தின் மீது இருந்த ஆர்வத்தால் தொடர்ந்து படங்களில் நடிப்பதை தவிர்த்துவிட்டதாக கூறப்படுகிறது.இந்நிலையில் நடிகை மானு தன்னை குறித்து நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார். அவர் கூறியதாவது, “லேட்டா தான் நான் திருமணம் செய்து கொண்டேன். நான் ஒரு பரதநாட்டிய கலைஞார். ‘காதல் மன்னன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் நான் என் பரதநாட்டியம் வகுப்பை ஆரம்பித்துவிட்டேன். உலக முழுவதும் சென்று பரதநாட்டியம் கற்றுக் கொடுப்பது, கற்றுக் கொள்வது என்று இருந்தேன். என் வாழ்வில் என்ன செய்ய வேண்டுமோ எல்லாமே செய்துவிட்டேன். நான் எதையும் விட்டுக் கொடுக்கவில்லை. நான் விட்டுக் கொடுத்தேன் என்று சொன்னால் அது பொய்யாக தான் இருக்கும்” என்றார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version