இலங்கை

வல்வெட்டித்துறையில் மூதாட்டியொருவர் சடலமாக மீட்பு!

Published

on

வல்வெட்டித்துறையில் மூதாட்டியொருவர் சடலமாக மீட்பு!

வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அதே இடத்தைச் சேர்ந்த பிறேமச்சந்திரன் வதனராணி(வயது-73) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.

குறித்த மூதாட்டி வசித்துவந்த வீட்டில் துர்நாற்றம் வீசியதை அடுத்து அயலவர்களால் வல்வெட்டித்துறை பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டது.

Advertisement

இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற கரவெட்டி திடீர் மரண விசாரணை அதிகாரி வேலுப்பிள்ளை பாஸ்கரன் விசாரணைகளை மேற்கொண்டு உடற்கூற்றுப் பரி சோதனைக்கு உத்தரவிட்டார். சாட்சிகளை வல்வெட்டித் துறை பொலிஸார் நெறிப்படுத்தினர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version