இலங்கை
ஹெரோய்னுடன் இளைஞர் கைது; தடுப்பில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி!
ஹெரோய்னுடன் இளைஞர் கைது; தடுப்பில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி!
யாழ்ப்பாணம் பொம்மைவெளிப் பகுதியில் ஹெரோய்னை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமையவே இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
சந்தேகநபரிடம் இருந்து 5 கிராம் 200 மில்லிகிராம் ஹெரோய்ன் மீட்கப்பட்ட நிலையில், அவரைத் தடுத்து வைத்து விசாரணை நடத்துவதற்கு பொலிஸாருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.