பொழுதுபோக்கு

15 நாள் ட்ரெஸ் இல்லாம நடிப்பு; அந்த ஒரு‌ சீன் 8 டேக் ஆச்சு, என்‌ வெக்கம் போயே போச்சு: பாலா பட நடிகர் ஓபன் டாக்!

Published

on

15 நாள் ட்ரெஸ் இல்லாம நடிப்பு; அந்த ஒரு‌ சீன் 8 டேக் ஆச்சு, என்‌ வெக்கம் போயே போச்சு: பாலா பட நடிகர் ஓபன் டாக்!

தமிழ் திரையுலகில் இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர், எழுத்தாளர் என பன்முகத்தன்மை கொண்டவர் ஜி.எம்.குமார். இவர் கடந்த 1986-ஆம் ஆண்டு சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரபு நடித்த ’அறுவடை நாள்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். முதல் படத்திலேயே இளையராஜா இசையில், பாடல்கள் அனைத்துமே ஹிட்டடித்தன. ஆனால், படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.தொடர்ந்து, ’பிக்பாக்கெட்’, ’இரும்புபூக்கள்’, ’உருவம்’ போன்ற படத்தை இயக்கினார். அதன்பின் கடந்த  1993-ஆம் ஆண்டு ’கேப்டன் மகள்’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநர் ஜி.எம்.குமார் நடிகராக அவதாரம் எடுத்தார். பின்னர் ’வெயில்’, ’மாயாண்டி குடும்பத்தார்’, ‘மலைக்கோட்டை’, ’மச்சக்காரன்’, ’குருவி’, ’சரவணன் இருக்க பயமேன்’, ’கர்ணன்’ என பல படத்தில் நடித்தார். இவர், பாலா இயக்கத்தில் வெளியான ’அவன் இவன்’ படத்தில் ஐனெஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த கதாபாத்திரம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அதிலும், ஆடையில்லாமல் மழையில் மக்கள் மத்தியில் ஓடும் காட்சி பெரிதும் பேசப்பட்டது. இப்படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் ஜி.எம்.குமார், இயக்குநர் பாலா இயக்கத்தில் ‘தாரை தப்பட்டை’ படத்திலும் ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இப்படி இயக்குநராகவும் நடிகராகவும் தனது திறமையை மக்களிடம் பதிவு செய்த நடிகர் ஜி.எம்.குமார் சமீபத்தில் தான் 25 வருடங்களாக லிங்க் ரிலேஷன்சிப்பில் இருந்ததாகவும் திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லை என்று கூறினார். இந்நிலையில், நடிகர் ஜி.எம்.குமார் ‘அவன் இவன்’ படத்தில் ஆடையில்லாமல் நடித்த காட்சி குறித்து நேர்காணல் ஒன்றில் மனம் திறந்துள்ளார்.அவர் பேசியதாவது, “அவன் இவன் படப்பிடிப்பின் போது இயக்குநர் பாலா வந்து கிளைமேக்ஸை மாற்றிவிட்டேன் நீங்கள் துணி இல்லாமல் நடிக்க வேண்டும் என்றார். ஒரு 15,000 பேர் மத்தியில் அந்த காட்சி எடுக்கப்பட்டது. 15 நாட்கள் ட்ரெஸ் இல்லாமல் நடித்தேன். 8 டேக் எடுத்தாச்சு மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆடை ஒன்னுமே இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறேன். என் அசிஸ்டெண்ட் வந்து சொன்னான் நல்ல கத்துங்க டேக் ஓகே ஆகிவிடும் என்று. அதன்படி, 8, 9 டேக்கில் கத்தினேன் அந்த டேக் ஓகே ஆகிவிட்டது. 15 நாட்கள் ஆடையில்லாமல் நடித்ததில் என வெட்கம் மறைந்துவிட்டது. அதுதான் என் டார்னிங் பாயிண்ட்” என்றார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version