பொழுதுபோக்கு

15-வயதில் அறிமுகம், விஜய் – அஜித்க்கு ஃபேவரெட் நடிகை; கடைசிவரை ரஜினியுடன் நடிக்காதவர்!

Published

on

15-வயதில் அறிமுகம், விஜய் – அஜித்க்கு ஃபேவரெட் நடிகை; கடைசிவரை ரஜினியுடன் நடிக்காதவர்!

தென்னிந்திய திரையுலகில் அறிமுகமாகி முன்னணி நடிகையாக பல வெற்றிப்படங்களை கொடுத்த ஒரு நடிகை பாலிவுட் வரை சென்ற நிலையில், திருமணத்திற்கு பிறகு நடிப்பில் இருந்து விலகினார். அவரின் சொத்து மதிப்பு தற்போது ரூ1000-ம் கோடிக்கு அதிகமாக உள்ளது.திரைத்துறையில் தங்களுக்கென ஒரு தனித்துவமான இடத்தை நிலைநிறுத்திக்கொள்ளும் நடிகைகள், ஒரு காலகட்டத்திற்குப் பிறகு திரையுலகை விட்டு விலகிச் செல்வதுண்டு. சிலர் திருமணத்திற்குப் பிறகு நடிப்பை விட்டுவிடுவார்கள். மற்றவர்கள் விருப்பத்தின் பேரில் அல்லது பல்வேறு சூழ்நிலைகள் காரணமாக நடிப்பில் இருந்து விலகுவார்கள். ஆனாலும் அவர்கள்  நடிப்பில் வெளிவந்த காலத்தால் அழியாத படங்கள் இன்றும் கொண்டாடப்படுகின்றன.அந்த வகையில், தென்னிந்தியத் திரையுலகில் தனது பயணத்தைத் தொடங்கி, பின்னர் பாலிவுட் வரை சென்றவர் தான் நடிகை அசின். அவர் நடித்த திரைப்படங்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், அவர் நடிப்பில் வெளியான பெரும்பாலான திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. இந்த நடிகை இரண்டு நாட்களுக்கு முன்புதான் தனது 40வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.கேரளாவின் கொச்சியில் பிறந்தவர் அசின், இவருடைய தந்தை ஒரு சிபிஐ அதிகாரியாகப் பணியாற்றினார், தாயார் ஒரு மருத்துவர். கொச்சியில் பள்ளிப் படிப்பை முடித்த அசின், பல மொழிகளில் புலமை பெற்றவர். இவருக்கு தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், சமஸ்கிருதம், மலையாளம், பிரெஞ்சு மற்றும் இந்தி என மொத்தம் 7 மொழிகள் அவருக்கு தெரியும் என்று தகவல்கள் உள்ளது.2001 ஆம் ஆண்டு, சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் வெளியான மலையாளத் திரைப்படமான ‘நரேந்திரன் மகன் ஜெயகாந்தன் வக’ படத்தின் மூலம் தனது நடிப்புப் பயணத்தை தொடங்கிய அசினுக்கு, அப்போது வயது 15 தான். அதன் பிறகு அவர் தனது கவனத்தைத் தெலுங்குத் திரையுலகின் பக்கம் திருப்பினார். 2004 ஆம் ஆண்டு வெளியான ‘எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி’ என்ற படம் தான் அசின் தமிழில் அறிமுகமான முதல் திரைப்படம். அதனைத் தொடர்ந்து, ‘உள்ளம் கேட்குமே’ படத்திலும் நடித்திருந்தார்.அதன்பிறகு முன்னணி நடிகர்களாக சூர்யாவின் ‘கஜினி’ மற்றும் ‘வேல்’, விக்ரமின் ‘மஜா’, விஜய்யின் ‘சிவகாசி’ மற்றும் ‘போக்கிரி’, அஜித்தின் ‘வரலாறு’ மற்றும் ‘ஆழ்வார்’ போன்ற பிரபலமான படங்களில் நடித்திருந்த அசின், தமிழில் தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார். கமல்ஹாசனுடன் தசாவதாரம் படத்தில் நடித்திருந்த அசின் ரஜினியுடன் படத்தில் நடிக்கவில்லை. அதேபோல் விஜயின் ‘காவலன்’ படத்திற்குப் பிறகு, அசின் தனது முழு கவனத்தையும் பாலிவுட் பக்கம் செலுத்தினார். அங்கு ‘கஜினி’, ‘ரெடி’, ‘ஹவுஸ்ஃபுல் 2’, ‘போல் பச்சன்’, ‘கிலாடி 786’ உள்ளிட்ட பல பாக்ஸ் ஆபிஸ் ஹிட் திரைப்படங்களைக் கொடுத்தார். மேலும், சல்மான் கான், அமீர் கான், அபிஷேக் பச்சன், அஜய் தேவ்கன் மற்றும் அக்‌ஷய் குமார் போன்ற நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள அசின்,  கடைசியாக, 2015 ஆம் ஆண்டு வெளியான ‘ஆல் இஸ் வெல்’ என்ற படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு, நடிப்பிலிருந்து ஓய்வு பெற்ற அசின், தனது 14 ஆண்டு கால திரைப் பயணத்தில், அவர் மொத்தம் 25 படங்களில் நடித்தார். மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் ராகுல் சர்மா என்பவரைத் திருமணம் செய்து கொண்டு திரையுலகிலிருந்து முற்றிலும் விலகினார். இவரது சொத்து மதிப்பு சுமார் ரூ. 1300 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இத்தம்பதியினருக்கு ஒரு மகள் உள்ளார். அஸின் தற்போது தனது குடும்பத்துடன் மும்பையில் வசித்து வருகிறார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version