இலங்கை
3 ஆண்டுகளில் போதைப்பொருளை முற்றாக ஒழிப்பதே அரசின் இலக்கு
3 ஆண்டுகளில் போதைப்பொருளை முற்றாக ஒழிப்பதே அரசின் இலக்கு
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு
அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் நாட்டிலிருந்து போதைப்பொருள்களை முற்றாக ஒழிப்பதே அரசாங்கத்தின் இலக்கு எனப் பொதுப்பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
பொலிஸ்மா அதிபர் மற்றும் சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவுடன் இணைந்து அமைச்சர் ஆனந்த விஜேபால, நேற்று முன்தினம் மாலை இலங்கை ராமண்ண மஹா நிகாயவின் மகாநாயக்கதேரர் மகுலேவே விமலதேரரைச் சந்தித்தார். நாளை வியாழ்க்கிழமை முதல் முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ள போதைப்பொருள் மற்றும் பாதாள உலக நடவடிக்கைகளை ஒழிப்பதற்கான தேசிய வேலைத்திட்டம் தொடர்பாக தேரருக்கு விளக்கமளிப்பதற்காகவே இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பாதாள உலக நடவடிக்கைகளை அடக்குவதற்கு அரசாங்கம் அதிகபட்ச நடவடிக்கைகளை எடுத்துவருகின்றது என்று பொதுப்பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.