இலங்கை
8,547 வெற்றிடங்களுக்கு அரச சேவையில் ஆட்சேர்ப்பு; அனுமதித்தது அமைச்சரவை!
8,547 வெற்றிடங்களுக்கு அரச சேவையில் ஆட்சேர்ப்பு; அனுமதித்தது அமைச்சரவை!
அரச சேவையில் ஆட்சேர்ப்புச் செயன்முறையை மீளாய்வு செய்தல் மற்றும் பணிக்குழாம் முகாமைத்துவத்துக்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவின் விதந்துரைகளின் அடிப்படையில் 22 துறைகளில் சுமார் 8 ஆயிரத்து 547 ஆட்சேர்ப்புகளை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அரசசேவையில் ஆட்சேர்ப்புச் செயன்முறையை மீளாய்வு செய்து தேவைகள், முன்னுரிமைகள் மற்றும் நேரச் சட்டகத்தை அடையாளங்கண்டு, அது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பிரதமரின் செயலாளரின் தலைமையில் உத்தியோகத்தர் குழுவொன்றை நியமிப்பதற்காக கடந்த ஆண்டு டிசெம்பர் மாதம் 30ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. அந்தக் குழுவுக்கு அமைச்சுகளிலும், அமைச்சுகளின்கீழ் இயங்குகின்ற திணைக்களங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களிலும் நிலவுகின்ற பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்காகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கோரிக்கைகளைக் கருத்திற்கொண்டு, கடந்த 2 ஆம் திகதி இடம்பெற்ற குழுக் கூட்டத்தில் விதந்துரைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
அந்த விதந்துரைகளுக்கு அமைய ஆட்சேர்ப்புகளை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த ஆட்சேர்ப்புகளில் வடக்கு மாகாணசபையில் 115 ஆட்சேர்ப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.