இலங்கை
9 வயதான பிக்குவிற்கு விகாரையில் நேர்ந்த துயரம்
9 வயதான பிக்குவிற்கு விகாரையில் நேர்ந்த துயரம்
குருணாகலில் வெல்லவ கினிகாராவ ரஜமஹா விகாரை குளத்தில் தவறி விழுந்த பிக்கு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வெல்லவ பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் கடந்த 28 ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
9 வயதுடைய பிக்கு ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பிக்கு குளத்தில் உள்ள மீன்களுக்கு உணவு வழங்கிக்கொண்டிருந்த போது குளத்தில் தவறி விழுந்துள்ள நிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாணைகளை வெல்லவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.