இலங்கை

அரசமைப்பை மீறவில்லை; அரசு தெரிவிப்பு!

Published

on

அரசமைப்பை மீறவில்லை; அரசு தெரிவிப்பு!

அரசமைப்பின் பிரகாரமே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாக்க செயற்பட்டுவருகின்றார். இதனால்தான் அரசமைப்பு மீறல் தொடர்பில் அவருக்கு எதிராக ஒரு குற்றச்சாட்டுக்கூட இல்லை என்று பொதுமக்கள் பாதுகாப்புப் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்சவும், அவரது குடும்பத்தாரும் தான் ஹிட்லர் போலச் செயற்பட்டனர். ஜனநாயகத்துக்கு சமாதிகட்டி சர்வாதிகார ஆட்சியை ஏற்படுத்துவதற்கு 18ஆவது திருத்தச்சட்ட மூலம் கொண்டுவரப்பட்டது. எமது ஜனாதிபதி அரசமைப்பின் பிரகாரமே செயற்படுகின்றார். நாட்டில் சட்டம் என்பது அனைவருக்கும் சமம். இந்தக் கோட்பாட்டை நாம் மீறப்போவதில்லை எனவும் சுனில் வட்டகல குறிப்பிட்டார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version