பொழுதுபோக்கு
அவன் ‘ஐ லவ் யூ’ சொன்னான், நான் ஓகே சொல்லிட்டேன்; காதல் அனுபவம் பகிர்ந்த அனுஷ்கா: பையன் யார் தெரியுமா?
அவன் ‘ஐ லவ் யூ’ சொன்னான், நான் ஓகே சொல்லிட்டேன்; காதல் அனுபவம் பகிர்ந்த அனுஷ்கா: பையன் யார் தெரியுமா?
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக பல வெற்றிப்படங்களை கொடுத்த அனுஷ்கா, இன்னும் திருமணம் செய்துகொள்ளாத நிலையில், தனது காதல் கதை குறித்து ஒரு பேட்டியில் அவர் பேசிய தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.தெலுங்கில் நாகர்ஜூனா நடிப்பில் வெளியான சூப்பர் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகை அனுஷ்கா ஷெட்டி தனது தனித்துவமான திறமையாலும் வசீகரிக்கும் அழகாலும் தென்னிந்திய சினிமாவை மாற்றியமைத்துள்ளார். ரெண்டு படத்தில் மாதவனுக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், ரஜினிகாந்துடன் ‘லிங்கா’, விஜய்யுடன் ‘வேட்டைக்காரன்’, சூர்யாவுடன் ‘சிங்கம்’ போன்ற முக்கியப் படங்களில் நடித்துள்ளார். இருப்பினும், ‘அருந்ததி’ திரைப்படம் அவருக்கு ஒரு தனித்துவமான அடையாளத்தைக் கொடுத்து, அவரைத் திரையுலகின் மிகவும் சக்திவாய்ந்த கதாநாயகிகளில் ஒருவராக நிலைநிறுத்தியது. அந்த படத்தில் அவர் தன் கேரக்டருக்காக எடுத்த அர்ப்பணிப்பு பாராட்டுக்களை பெற்றிருந்தது. அதேபோல் ‘இஞ்சி இடுப்பழகி’ திரைப்படத்தில் உடல் எடையை அதிகரித்து தனது கேரக்டருக்காக வலு சேர்த்தார். அந்த படம் வெற்றிபெறவில்லை என்றாலும், அவரது நடிப்பு பரவலான பாராட்டுகளைப் பெற்றது.தற்போது 43 வயதாகும் அனுஷ்கா ஷெட்டி, நடிகர் பிரபாஸுடன் நெருங்கிய நட்பு கொண்ட போதிலும், இருவரையும் இணைத்து வரும் வதந்திகளுக்கு மத்தியில் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார். சமீபத்திய பேட்டி ஒன்றில், தனது முதல் காதல் அனுபவத்தை அனுஷ்கா ஷெட்டி நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தார். “நான் 6-ம் வகுப்பு படித்தபோது, ஒரு பையன் என்னைக் காதலிப்பதாகச் சொன்னான். அந்த வயதில் அதன் பொருள் என்னவென்று எனக்குப் புரியவில்லை, ஆனாலும் நான் ‘சரி’ என்று சொன்னேன். அவை மிகவும் இனிமையான நினைவுகள்” என்று அவர் கூறினார்.’பாகுபலி: தி பிகினிங்’ மற்றும் ‘பாகுபலி: தி கன்க்ளூஷன்’ திரைப்படங்களின் மூலம் பாக்ஸ் ஆபிஸ் வெற்றியை அடைந்த பிறகு, அனுஷ்கா ஷெட்டி பெரிய திட்டங்களில் இருந்து சிறிது காலம் ஓய்வு எடுத்தார். சமீபத்தில் அவர் ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் போலிஷெட்டி’ படத்தின் மூலம் மீண்டும் களம் இறங்கினார். அதைத் தொடர்ந்து வெளியான ‘காட்டி’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. பிரபாஸூடன் இவர் நடித்த பாகுபலி முதல் மற்றும் 2-ம் பாகங்கள் ஒன்றாக இணைந்து ஒரே படமாக நாளை (அக்டோபர் 31) வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.