இலங்கை
ஆடை ஏற்றுமதி செப்ரெம்பரில் உயர்வு!
ஆடை ஏற்றுமதி செப்ரெம்பரில் உயர்வு!
கடந்த செப்ரெம்பர் மாதம் இலங்கையின் ஆடை ஏற்றுமதி மிதமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றம் தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிற சந்தைகளில் வலுவான செயற்றிறன்காரணமாக, அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியத்துக்கு ஏற்றுமதி குறைந்த போதிலும், இலங்கையின் ஆடை ஏற்றுமதிகள் ஆண்டுக்கு ஆண்டு மிதமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. 2025 ஆம் ஆண்டு செப்ரெம்பரில் மொத்த ஆடை ஏற்றுமதி 403.01 மில்லியன் அமெரிக்க பொலராகப் பதிவாகியுள்ளது. 2024ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 1.58 சதவீதம் அதிகரிப்பைக் குறிக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.