உலகம்

ஆறு சிறுமிகளிடம் அத்துமீறிய இலங்கை பௌத்த பிக்கு; அவுஸ்திரேலிய நீதிமன்றத்தின் உத்தரவு!

Published

on

ஆறு சிறுமிகளிடம் அத்துமீறிய இலங்கை பௌத்த பிக்கு; அவுஸ்திரேலிய நீதிமன்றத்தின் உத்தரவு!

அவுஸ்திரேயாவில் இலங்கையை சேர்ந்த பௌத்த பிக்கு  ஒருவர் சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இலங்கையை சேர்ந்த கீஸ்பரோவில் உள்ள தம்ம சரண கோவிலின் தலைமை பிக்குவானா  70 வயதுடைய  நாவோதுன்னே விஜிதா என்பவரே குறித்த  குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளார். மெல்பர்னில் வசித்து வரும் அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. மெல்போர்ன் விகாரையில் ஆறு சிறுமிகளுக்கு எதிரான வரலாற்று பாலியல் குற்றங்களில் இலங்கை பிக்கு குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளார். 1994 -2002 க்கு இடையிலான காலப்பகுதியில் இந்தக் குற்றங்களைச் செய்ததாக  கவுண்டி நீதிமன்ற நடுவர் மன்றம் தீர்ப்பளித்தது. வயதான பிக்குவால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான அனைத்து சிறுவர்களும் விகாரையில் சமய நெறி கற்க சென்றவர்கள் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 16 வயதுக்குட்பட்ட குழந்தையை பாலியல் ரீதியாக துன்பம் செய்ததாக எட்டு குற்றச்சாட்டுகளிலும், அநாகரீகமான செயலைச் செய்ததாக ஒன்பது குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார். அதுமட்டுமன்றி  பாலியல் ரீதியாக 5 வயது சிறுமியையும்  துன்புறுத்தியதாக நீதிமன்றில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version