வணிகம்

இந்திய உடனான வர்த்தகத்தில் தமிழகம் முக்கிய பங்கு வகிக்கிறது; கோவையில் ஜப்பான் நகர துணை மேயர் பேட்டி

Published

on

இந்திய உடனான வர்த்தகத்தில் தமிழகம் முக்கிய பங்கு வகிக்கிறது; கோவையில் ஜப்பான் நகர துணை மேயர் பேட்டி

கோவை தொழில்துறையைச் சேர்ந்த 13 உறுப்பினர்களைக் கொண்ட உயர்மட்டக் குழு சமீபத்தில் ஜப்பானின் ஹமா மட்சு நகரத்திற்குச் சென்றது. அங்கு அவர்கள் முன்னணி தொழில்துறையினரை சந்தித்து, வணிக மேம்பாடு தொடர்பான வழிகளை ஆராய ஹமா மட்சு நகர மேயரைச் சந்தித்து திரும்பினர்.இந்நிலையில் ஜப்பான் நாட்டின் ஹமா மட்சு நகர துணை மேயர் .நைட்டோ ஷின்ஜிரோ தலைமையில் ஜப்பான் நாட்டில் இருந்து வந்த குழுவினர் கோவையில் தொழில் துறையினருடன் ஆலோசனை மேற்கொண்டனர்.கோவை சரவணம்பட்டி கே.ஜி.ஐ.எஸ்.எல்.கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இதில் கல்லூரியின் தலைவர் அசோக் பக்வத்சலம், கார்பரேட் இணைப்புகளின் தேசிய இயக்குனர் வேதா பெஸ்டின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ”ஜப்பானுக்கும் இந்தியாவுக்குமான வர்த்தகத்தில் தமிழகம் முக்கிய பங்கு வகிக்கிறது. தற்போது கோவை நகர் மற்றும் ஜப்பானின் ஹமா மட்சு நகர் இடையே தொழில் வர்த்தகம் தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது. கோவையில் இருந்து ஜப்பானிற்கு தொழில் துவங்கு வதற்கான வாய்ப்புகள் இனி கூடுதலாக உருவாக வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட உள்ளது. மேலும் இந்த தொடர்பு இந்தியாவிற்கும் ஜப்பானுக்கும் இடையே வளர்ந்து வரும் உறவுகளை மேலும் வலுப்படுத்துவதாக உள்ளது,” என்று தெரிவித்தனர்.பி.ரஹ்மான், கோவை 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version