இலங்கை

இலங்கையின் சனத்தொகை 21 மில்லியனாக பதிவு!

Published

on

இலங்கையின் சனத்தொகை 21 மில்லியனாக பதிவு!

இலங்கையின் மொத்த சனத்தொகை 21.7 மில்லியனாக பதிவாகியுள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டுக்கான சனத்தொகை மதிப்பீட்டுக்கமைய இலங்கையின் மொத்த சனத்தொகை 21.7 மில்லியனாக பதிவாகியுள்ளது.

இந்நிலையில், இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஆண்களின் எண்ணிக்கை 48.3 வீதமாகவும்,பெண்களின் எண்ணிக்கை 51.7 வீதமாகவும் பதிவாகியுள்ளது.
மேலும், 2012ஆம் ஆண்டு தொடக்கம்  2024ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இலங்கையின் சனத்தொகையானது, ஆண்டுதோறும் சராசரியாக 0.5 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. சனத்தொகை அதிகரிப்பு வீதம் 12 வருட காலப்பகுதியை உள்ளடக்கியதாக அமையப்பெற்றுள்ளது.

Advertisement

ஆண்டுக்கு 0.5% என்ற இந்த மிதமான அதிகரிப்பு வீதம், நாட்டின் பிறப்பு வீதம், இறப்பு வீதம் மற்றும் நிகர குடியேற்ற வீதம் ஆகிய காரணிகளின் ஒருங்கிணைந்த விளைவை சுட்டிக்காட்டுகிறது.
கடந்த 2024ஆம் ஆண்டு  குடிசன,வீட்டுவசதிகள் தொகைமதிப்பின் போது இலங்கையின் சனத்தொகை 21,781,800 ஆக பதிவாகியுள்ளது. இதேவேளை, நாடுமுழுதும்  உள்ள மலையகத் தமிழர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளமையை காணமுடிகிறது.

2012 ஆம் ஆண்டு 839,504 ஆக காணப்பட்ட மலையகத் தமிழர்கள் 2024 ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் 600,360 ஆக காணப்படுகின்றனர். இதற்கமைய, சுமார் 239,144 க்கும் மேற்பட்ட சனத்தொகை வித்தியாசம் காணப்படுகிறது. மலையகத் தமிழர் சனத்தொகை சதவீதம் 2012 ஆம் ஆண்டில் 4.1 சதவீதமாக இருந்ததுடன் 2024 ஆம் ஆண்டின் போது 1.3 சதவீதம் குறைந்து 2.8 சதவீதமாக பதிவாகியுள்ளது.

இதேவேளை, இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை சிறியளவில் அதிகரித்துள்ளதோடு, தமிழ் பேசும் முஸ்லிம் மககளின் எண்ணிக்கையிலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டு 2,269,266 ஆக காணப்பட்ட இலங்கைத் தமிழர்கள் 2024 ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் 2,681,627ஆக காணப்படுகின்றனர்.
மேலும் 2012 ஆம் ஆண்டு 1,892,638 ஆக காணப்பட்ட இலங்கை முஸ்லிம்கள் 2024 ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் 2,283,246 ஆக காணப்படுகின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version