இலங்கை

கனேமுல்ல சஞ்சீவ கொலை ; பெண் சட்டத்தரணியை மேலும் தடுத்து வைக்க கோரிக்கை

Published

on

கனேமுல்ல சஞ்சீவ கொலை ; பெண் சட்டத்தரணியை மேலும் தடுத்து வைக்க கோரிக்கை

  கனேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்திற்கு , இசாரா செவ்வத்திக்கு உதவி ஒத்தாசை வழங்கியதாக சந்தேகத்தின் பேரில் பெண் சட்டத்தரணி கைது செய்யப்பட்டு, 72 மணி நேரம் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் பெண் சட்டத்தரணியை, மேலும் 90 நாட்களுக்குத் தடுத்து வைத்து விசாரணை செய்ய, தடுப்புக் காவல் உத்தரவைப் பெற எதிர்பார்ப்பதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

Advertisement

இந்தச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர்களில் ஒருவரான கெஹெல்பத்தர பத்மே தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் குறித்து கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் விடயங்களை சமர்ப்பித்தபோதே, குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version