இலங்கை
சத்திர சிகிச்சைக்காக வீட்டை விற்ற டிலான் பெரேரா
சத்திர சிகிச்சைக்காக வீட்டை விற்ற டிலான் பெரேரா
சத்திர சிகிச்சைக்காக முன்னாள் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தனது வீட்டை விற்தாக தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
நான் நோய்வாய்ப்பட்டிருந்தேன். எனக்குச் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
எதிர்பார்க்கப்பட்டதை விடவும் அதிக செலவு ஏற்பட்டது. அதனை ஈடுசெய்வதற்கு என்னிடம் பணம் இருக்கவில்லை.
எனவே, பதுளையில் நான் 63 வருடங்களாக வாழ்ந்த வீட்டை விற்பனை செய்துவிட்டேன்
எனது தந்தை வழி உரிமையாகவே எனக்கு இந்த வீடு கிடைத்தது.
வீட்டை விற்ற பணத்தில் மருத்துவச் செலவைச் செலுத்திவிட்டேன்.
எஞ்சிய பணத்தில் சிறிய வீடொன்றைக் கட்டிக்கொண்டு எஞ்சிய காலத்தைக் கடந்த வேண்டியதுதான்.
பதுளையில் இருந்தே அரசியலிலும் ஈடுபடுவேன். ஜனாதிபதி நிதியத்திடம் பணம் கேட்பதற்கு நான் முற்படவில்லை எனவும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா கூறினார்.