வணிகம்
சென்னை மறைமலை நகரில் மீண்டும் ஃபோர்டு உற்பத்தி தொடக்கம்: ரூ. 3,250 கோடி முதலீட்டில் புதிய பவர் ட்ரெயின் தொழிற்சாலை!
சென்னை மறைமலை நகரில் மீண்டும் ஃபோர்டு உற்பத்தி தொடக்கம்: ரூ. 3,250 கோடி முதலீட்டில் புதிய பவர் ட்ரெயின் தொழிற்சாலை!
தலைமைச் செயலகம், சென்னை:அமெரிக்காவின் புகழ்பெற்ற கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு (Ford), தமிழ்நாட்டில் மூடப்பட்டிருந்த தனது ஆலையை மீண்டும் திறக்க உள்ளது. சென்னை அடுத்த மறைமலை நகரில் உள்ள தொழிற்சாலையில் ஃபோர்டு நிறுவனம் மீண்டும் உற்பத்தியைத் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) இன்று (அக்டோபர் 31, 2025) முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் தலைமைச் செயலகத்தில் கையெழுத்தானது.இந்த மறுவருகை, தமிழ்நாட்டின் ஆட்டோமொபைல் துறையில் ஒரு முக்கிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.முதலீடு மற்றும் வேலைவாய்ப்பு உறுதி:தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா செய்தியாளர்களிடம் இந்த ஒப்பந்தம் குறித்த விரிவான தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.Hard work and dedicated follow up of #TeamCMMKStalin pays off !#Ford is officially back to Chennai! 🎊Today, Ford and the Government of Tamil Nadu signed an MoU in the presence of Honourable @CMOTamilNadu Thiru. @MKStalin avargal and our Honourable DyCM Thiru @Udhaystalin… pic.twitter.com/NDwFyz4Utfஃபோர்டு நிறுவனம் மறைமலை நகர் தொழிற்சாலையில் 3,250 கோடி ரூபாய் முதலீடு செய்ய உறுதி அளித்துள்ளது.இந்தத் தொழிற்சாலையில் முதல் கட்டமாக ஆண்டுக்கு 2,35,000 புதிய என்ஜின்கள் மற்றும் பவர் ட்ரெயின்கள் (Power Train – வாகனத்தின் இயங்கு சக்தி பாகங்கள்) தயாரிக்கப்பட உள்ளன. இந்த உற்பத்தித் திட்டம் புதிய மற்றும் அடுத்த தலைமுறை என்ஜின் (Next Generation Engines) தொழில்நுட்பங்களைக் கொண்டிருக்கும் என ஃபோர்டு நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.ஃபோர்டு நிறுவனத்தின் வெளியேற்றமும், தமிழகத்தின் தொடர் முயற்சியும்:கடந்த 1999 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியால் மறைமலை நகரில் ஃபோர்டு தொழிற்சாலை தொடங்கப்பட்டு, 2009 இல் விரிவாக்கம் செய்யப்பட்டது. எனினும், பல்வேறு காரணங்களால் 2021 ஆம் ஆண்டு ஃபோர்டு இந்தியாவில் தனது உற்பத்தியை நிறுத்திவிட்டு, குஜராத்தில் உள்ள உற்பத்தி மையத்தை டாடா நிறுவனத்திற்கு மாற்றியது. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்தது தமிழக வளர்ச்சிக்குப் பின்னடைவாக இருந்தது.செப்டம்பர் 2024 ஆம் ஆண்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அமெரிக்கா பயணம் மேற்கொண்டபோது, சிகாகோவில் ஃபோர்டு நிறுவனத்தின் தலைவர் மற்றும் துணைத் தலைவரைச் சந்தித்துப் பேசினார்.தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா அமெரிக்கா சென்று ஃபோர்டு நிறுவனத்துடன் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.வெற்றி:உலக அளவில் நிலவும் ‘வரிப்போர்’ மற்றும் புவிசார் அரசியல் நெருக்கடிகளுக்கு (Geopolitical situations) மத்தியில், இந்தப் பேச்சுவார்த்தைகள் வெற்றி பெற்று இன்று ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இது ‘திராவிட மாடல்’ அரசின் தொடர் முயற்சிக்குக் கிடைத்த வெற்றி என அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பெருமிதம் தெரிவித்தார்.பணிகள் துவக்கம்:புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதைத் தொடர்ந்து, இந்த ஆண்டே இதற்கான தளத் தயாரிப்புப் பணிகள் (Activation works) தொடங்கும்.தொழிற்சாலையின் மறுசீரமைப்புப் பணிகள் நிறைவடைந்து, புதிய வகை இன்ஜின்கள் உற்பத்தி செய்யும் பணிகள் 2028 அல்லது 2029 ஆம் ஆண்டில் தொடங்கும் என்று தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.இந்த ஒப்பந்தம், தமிழ்நாட்டின் தொழில் முதலீட்டுச் சூழல் மீது சர்வதேச நிறுவனங்கள் வைத்துள்ள நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.