பொழுதுபோக்கு

டி.ஆர்.பி-யில் சரிந்த சிறகடிக்க ஆசை; மருமகளுக்கு மாஸ் முன்னேற்றம்: இந்த வார அப்டேட்!

Published

on

டி.ஆர்.பி-யில் சரிந்த சிறகடிக்க ஆசை; மருமகளுக்கு மாஸ் முன்னேற்றம்: இந்த வார அப்டேட்!

சின்னத்திரையில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் அவ்வப்போது பழைய சீரியல்கள் முடிவுக்கு வருவதும், புதிய சீரியல்கள் களமிறங்குவதும் தொடர்ந்து நடக்கும் வழக்கம். ஆனால் இந்த சீரியல்கள் டி.ஆர்.பி ரேட்டிங்கை வைத்தே அதற்கு மக்களிடம் கிடைக்கும் வரவேற்பு என்ன என்பது குறித்து தெரியவரும் அந்த வகையில் 2025-ம் ஆண்டின் 42வது வாரத்திற்கான டாப் 10 தமிழ் சீரியல்களின் டிஆர்பி ரேட்டிங்கை பார்க்கலாம்பாண்டியன் ஸ்டோர்ஸ் 2விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல், கடந்த வாரம் 6.46 புள்ளிகள் பெற்று 10-வது இடம் பெற்றிருந்த நிலையில், இந்த வாரம் 7.27 புள்ளிகளை பெற்று அதே 10-வது இடத்தில் நீடிக்கிறது. வீர ஹனுமன்சன் டிவியில் புதிதாக ஒளிபரப்பாகி வரும் ஹனுமன் என்ற ஆன்மிக சீரியல், கடந்த வாரம் 6.54 புள்ளிகள் பெற்றிருந்த நிலையில், இந்த வாரம் 7.28 புள்ளிகள் பெற்று 9-வது இடத்தை பிடித்துள்ளது.சிறகடிக்க ஆசைவிஜய் டிவியில் அதிக ரசிகர்களை பெற்ற சீரியல்களில் ஒன்றாக இருக்கும் சிறகடிக்க ஆசை, கடந்த வாரம் 7.75 ரேட்டிங் உடன் 7-வது இடத்தில் இருந்த நிலையில், இந்த வாரம் 7.81 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் உள்ளது.அய்யனார் துணைஎதிர்நீச்சல் மதுமிதா நடித்து வரும் விஜய் டிவியின் அய்யனார் துணை சீரியல், கடந்த வாரம் 7.51 புள்ளிகள் உடன் 8-ம் இடத்தில் இருந்த நிலையில், இந்த வாரம் 8.13 டிஆர்பி புள்ளிகளை பெற்று 7-வது இடத்தில் உள்ளது. அன்னம்சன் டிவியின் அன்னம் சீரியல் கடந்த வாரம் 7.98 புள்ளிகளை பெற்றிருந்த நிலையில், இந்த வாரம் 8.68 புள்ளிகள் பெற்று 6-ம் இடத்தை தக்க வைத்துள்ளது.எதிர்நீச்சல் தொடர்கிறதுசன் டிவியில் விறுவிறுப்பான கதைக்களத்துடன் சென்று கொண்டிருக்கும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் கடந்த வாரம் 8.55 புள்ளிகளுடன் 4-ம் இடத்தில் இருந்த நிலையில், இந்த வாரம் 8.96 புள்ளிகளுடன் 5-ம் இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது.மருமகள்சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மருமகள் சீரியல், கடந்த வாரம் 8.07 புள்ளிகளுடன் 5-ம் இடத்தில் இருந்த நிலையில், இந்த வாரம் 9.17 புள்ளிகள் உடன் 4-ம் இடத்தை பிடித்து அசத்தி உள்ளது.கயல்சன் டிவியில் சைத்ரா ரெட்டி மற்றும் சஞ்சீவ் நடிப்பில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல், கடந்த வாரத்தைப் போல் இந்த வாரமும் 9.65 டிஆர்பி ரேட்டிங் பெற்று மூன்றாம் இடத்தை தக்கவைத்து உள்ளது. மூன்று முடிச்சுசன் டிவியின் பிரைம் டைம் சீரியல்களின் ஒன்றான மூன்று முடிச்சு சீரியல், 10.55 டிஆர்பி ரேட்டிங்கை பெற்று 2ம் இடத்திலேயே நீடிக்கிறது. சிங்கப்பெண்ணேஒளிபரப்பை தொடங்கியதில் இருந்து டாப்பில் இருக்கும், சன் டிவியின் சிங்கப்பெண்ணே சீரியல் இந்த வாரமும் 10.86 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்கவைத்து இருக்கிறது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version