இலங்கை

திருமண வீட்டிலும் புகுந்த கியூ ஆர் கோடு; சமூகவலைத்தளங்களில் வைரல்!

Published

on

திருமண வீட்டிலும் புகுந்த கியூ ஆர் கோடு; சமூகவலைத்தளங்களில் வைரல்!

   கேரளாவில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் நடைபெற்ற மொய் விருந்தில் கியூ ஆர் கோடு மூலம் பணம் வசூலிக்கப்பட்டு உள்ளமை சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என பெரியவர்கள் சொல்வார்கள். திருமண விழாக்கள் பாரம்பரிய முறைப்படி நடைபெறுவது வழக்கம்.

Advertisement

தற்போதைய காலகட்டத்தில் திருமண அழைப்பிதழ் அச்சடிப்பதிலும், ஆடைகளை வடிவமைப்பதிலும் தொழில்நுட்பத்தின் உதவியுடன் புதுமைகளை புகுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கேரளாவில் இடம்பெற்ற திருமண் நிகழ்வு ஒன்றில் மணமகளின் தந்தை ஆன்லைன் பணபரிவர்த்தனைக்கான கியூ ஆர் கோடு பொறித்த அட்டையை தனது சட்டைப்பையில் ஒட்டி இருந்தார்.

திருமணத்திற்கு வந்த உறவினர்கள் சப்பிட்டு முடித்து விட்டு அந்த கியூஆர் கோடை ஸ்கேன் செய்து தங்களது மொய்ப்பணத்தை செலுத்தினர்.

Advertisement

இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பேசுபொருளாகியுள்ளது.  

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version