இலங்கை

தேர்தல் திணைக்களத்தில் தூக்கில் தொங்கிய மட்டக்களப்பு இளைஞன் ; பொலிஸார் குழப்பம்

Published

on

தேர்தல் திணைக்களத்தில் தூக்கில் தொங்கிய மட்டக்களப்பு இளைஞன் ; பொலிஸார் குழப்பம்

  தேர்தல் திணைக்களத்தில் தூக்கிட்ட நிலையில் அங்கு பணிபுரியும் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு எருவில் பகுதியைச் சேர்ந்த நபரே இவ்வாறு தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

Advertisement

நேற்றைய தினம் அலுவலகத்தில் சில வேலைகள் செய்ய வேண்டி உள்ளதால் நேற்று இரவு அங்கு தங்கி இருந்து அவருடைய பணியினை மேற்கொண்டு வந்துள்ளதா அறிய முடிகின்றது.

குறித்த நபர் நேற்றிரவு அலுவலகத்தில் தங்கி இருந்து தனது கடமைகளை மேற்கொண்டவாறு இன்று காலை அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் .

இன்று காலை அலுவலகத்துக்குள் சென்ற காவலாளி குறித்த நபர் தூக்கிட்ட நிலையில் காணப்பட்டுள்ளதாக முதல்கட்ட விசாரணைகள் இருந்து தெரியவந்துள்ளது.

Advertisement

குறித்த நபர் தற்கொலை செய்தாரா அல்லது கொலை செய்யப்பட்டுள்ளாரா என்று விசாரணைகளை மட்டக்களப்பு போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version