இலங்கை

நாளை முதல் பொலித்தீன் பைகள் இலவசமாக விநியோகிப்பதற்கு தடை!

Published

on

நாளை முதல் பொலித்தீன் பைகள் இலவசமாக விநியோகிப்பதற்கு தடை!

பொருட்களை எடுத்துச் செல்லப் பயன்படுத்தப்படும் பொலித்தீன் பைகளை இலவசமாக விநியோகிப்பது நவம்பர் 1ஆம் திகதி   நாளை முதல் தடைசெய்யப்படும் என்று நுகர்வோர் விவகார ஆணையம் (CAA) அறிவித்துள்ளது.

கடந்த ஒக்டோபர் 01ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பில், நுகர்வோருக்கு வழங்கப்படும் பட்டியலில் விற்பனையாளர்கள் பொலித்தீன்  பைகளின் விலையைக் குறிப்பிடுவதை நுகர்வோர் விவகார ஆணையம் கட்டாயப்படுத்தியுள்ளது. குறைந்த அடர்த்தி பொலித்தீன்  (LLDPE) மற்றும் நேரியல் குறைந்த அடர்த்தி பொலித்தீன்  (LDPE) ஆகியவற்றால் செய்யப்பட்ட பைகளை இலவசமாக வழங்கக்கூடாது என்றும்  அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

வணிகங்கள் இந்த பைகளின் விலையை தங்கள் வளாகத்தில் தெளிவாகக் காட்சிப்படுத்த வேண்டும் எனவும் மேலும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version