பொழுதுபோக்கு
பிக்பாஸின் ஸ்மார்ட் மூவ்… எலிமினேட்டாகும் வி.ஜே.பார்வதி? நிகழும் அதிரடி திருப்பங்கள்
பிக்பாஸின் ஸ்மார்ட் மூவ்… எலிமினேட்டாகும் வி.ஜே.பார்வதி? நிகழும் அதிரடி திருப்பங்கள்
பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. எப்போதும் இல்லாத விதமாக பிக்பாஸில் திரைப்பிரபலங்களை தாண்டி சமூக வலைதள பிரபலங்கள் நிறைந்துள்ளனர். இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சி கடும் விமர்சினத்திற்குள்ளானது. 20 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்த நிலையில் நான்கு பேர் வெளியேறி 16 போட்டியாளர்கள் தற்போது வீட்டினுள் இருக்கின்றனர்.நந்தினி தன்னால் பிக்பாஸ் வீட்டில் இருக்க முடியாது என்று கூறி வெளியேறினார். பிரவீன் காந்தி, அப்சரா சி.ஜே, ஆதிரை ஆகியோர் அடுத்தடுத்த வாரங்களில் எலிமினேட்டாகினர். இதில், ஆதிரை, எஃப்.ஜே-வை ரொம்ப டார்ச்சர் செய்ததால் வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது. என்னதான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தினமும் சண்டை, பிரச்சனைகள் இருந்தாலும் நிகழ்ச்சியில் ஒரு விறுவிறுப்பு இல்லை என்று கூறப்படுகிறது.இதனால், பிக்பாஸ் நிகழ்ச்சியை விறுவிறுப்பாக்கும் விதமாக வைல்டு கார்டு போட்டியாளர்களை உள்ளே இறக்க உள்ளனர். முன்பு வைல்டு கார்டு போட்டியாளர்கள் 50 அல்லது 60 நாட்களில் தான் உள்ளே செல்வார்கள். ஆனால், தற்போது 30 நாட்கள் கூட நிறைவடையாத நிலையில் வைல்டு கார்டு போட்டியாளர்கள் உள்ளே செல்ல உள்ளனர். வைல்டு கார்டு போட்டியாளர்களாக திவ்யா கணேஷ், சாண்ட்ரா, பிரஜின், அமித் ஆகியோர் உள்ளே செல்ல உள்ளனர்.முன்பு வைல்டு கார்டு போட்டியாளர்கள் யார் என்றே தெரியாமல் இருக்கும். இவர்கள் சர்ப்ரைஸாக பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வார்கள். ஆனால், இந்த முறை வைல்டு கார்டு போட்டியாளர்களை வெளிப்படையாகவே பிக்பாஸ் நிகழ்ச்சியினர் அறிவித்துவிட்டனர். இதில், பிரஜின் – சாண்ட்ரா தம்பதிகளாக உள்ளே நுழைய உள்ளனர். போன சீசனில் பாலாஜியும் அவரது மனைவியும் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றனர். இப்படி ஒவ்வொரு வருடமும் ஆர்வத்தை அதிகரிக்கும் விதமாக பிக்பாஸ் நிகழ்ச்சியின் விதிகள் மாற்றப்பட்டு வருகின்றனர்.இந்நிலையில், இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போவது யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, வி.ஜே.பார்வதி இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, பிக்பாஸ் வீட்டில் நுழையும் திவ்யா கணேஷும், சாண்ட்ராவும் மிகவும் ஸ்ட்ரேட் ஃபார்வேர்டான ஆட்கள். அதுமட்டுமல்லாமல், வி.ஜே.பார்வதியிடம் தேவையான கண்டெண்ட்களை கொடுத்து விட்டதால் அவரை வெளியேற்ற பிக்பாஸ் குழு முடிவு செய்துள்ளதாக செய்தி பரவி வருகிறது.மேலும்,வைல்டு கார்டு போட்டியாளர்களாக வரும் திவ்யா கணேஷும், சாண்ட்ராவும் பார்வதி வேலையை செய்யலாம். இதனால் பார்வதி வெளியேற்றப்படுகிறார் என்ற செய்தியும் இணையத்தில் வலம் வருகிறது. இதுவரை பார்வதி பிக்பாஸிற்கு கண்டெண்ட் கொடுத்த நிலையில் இனி திவ்யா கணேஷும், சாண்ட்ராவும் பார்வதி வேலையை செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.