இந்தியா

மின்கட்டணம் உயர்வு: புதுச்சேரி அ.தி.மு.க கண்டன ஆர்ப்பாட்டம்

Published

on

மின்கட்டணம் உயர்வு: புதுச்சேரி அ.தி.மு.க கண்டன ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி மாநில அ.தி.மு.க சார்பில் புதுச்சேரியில் உயர்த்தப்பட்ட மின்கட்டண உயர்வை கண்டித்தும், ஆளும் அரசை திரும்ப பெற வலியுறுத்தியும் மின்துறை தலைமை அலுவலகம் முன்பு  மாநில கழக செயலாளர் அன்பழகன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பேரணியாக வந்த அ.தி.மு.க-வினர் மின்துறை தலைமை அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையின் தடுப்புகளை மீறி மின்துறை வாயில் கதவை திறந்து உள்ளே சென்று கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து கண்காணிப்பு பொறியாளர் கனியமுதனை சந்தித்து மின்கட்டடணம் உயர்வை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில கழக செயலாளர் அன்பழகன் பேசியதாவது:- புதுச்சேரி மாநிலத்தில் லாபத்துடன் இயங்கும் மின்துறையை தனியார் மயமாக்காமல் பாதுகாத்தல் மற்றும் மின் கட்டண உயர்வு விஷயத்தில் மிகப்பெரிய ஏமாற்றத்தை ஆளும் அரசானது மக்களுக்கு அளித்து வருகிறது. லாபத்துடன் இயங்கும் மின் துறையை தனியார் மையமாக அரசு முழுமையாக ஒப்புதல் அளித்த பிறகும் அதை மூடி மறைக்கும் செயலில் அரசு ஈடுபட்டுக் கொண்டிருப்பது வெட்கக்கேடான செயலாகும். தனியார் பயன்பெறும் விதத்தில் மின் கட்டணத்தை தாறுமாறாக ஒரு ஆண்டுக்கு இரண்டு மூன்று முறை உயர்த்துவது வாக்களித்த மக்களை வஞ்சிக்கும் செயலாகும்.மாநில மின் நுகர்வோர்களை அடிமைகள் போல் ஆளும் அரசு நடத்துகிறது. ஏற்கனவே பல தலைப்புகளில் மறைமுக மின் கட்டண உயர்வினை மக்கள் மீது ஆளும் அரசு திணித்துள்ளது. கடந்த ஜூன் மாதம் அரசின் பரிந்துரையை ஏற்று இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதியோடு தாறுமாறாக மின் கட்டணத்தை அரசு உயர்த்தியது. அ.தி.மு.க உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியின் போராட்டத்திற்குப் பிறகு உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தில் ஒரு சிறிய பகுதி அரசு மானியமாக ஏற்றது.இந்நிலையில், மீண்டும் புதுச்சேரி ஆளும் அரசின் பரிந்துரையை ஏற்று மின் கட்டணம் உயர்வினை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி அனைத்து ஸ்லாப்புகளிலும் மின் கட்டணம் யூனிட்டுக்கு 20 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரி மக்களை ஏமாளிகள் என நினைத்து அரசு ஒரு தந்திர வேலையை செய்துள்ளது. ஏற்கனவே மின் வசூலில் ஜீரோவிலிருந்து நூறு யூனிட் 100 யூனிட்டில் இருந்து 200 யூனிட் 200 யூனிடத்திலிருந்து 300, 300க்கு மேல் எவ்வளவு யூனிட் பயன்படுத்தினாலும் அது ஒரு ஸ்லாப் என மொத்தம் வீட்டு உபயோகத்தில் நான்கு ஸ்லாப்புகள் இருந்தன.அதை தற்போது முன்னுரிலிருந்து நானூறு வரை தனி சிலாப்பாக மின்துறை மறைமுகமாக அறிவித்துள்ளது. ஏற்கனவே மின்கட்டணத்தில் நான்கு அடுக்கு முறை இருந்ததை தற்பொழுது ஒன்றை உயர்த்தி ஐந்து அடுக்கு முறையாக மாற்றம் செய்துள்ளது. இதனால் நடுத்தர மக்கள் மிகப் பெரிய பாதிப்புக்கு ஆளாக்கப்படுவார்கள். மின் துறையை ஏற்று நடத்தும் தனியார் பயன்பெறுகின்ற விதத்தில் சுமார் 400 கோடிக்கு மேல் மக்களுடைய வரிப்பணம் மீட்டர் மாற்றுவதற்கு அரசால் அனுமதிக்கப்பட்டு உள்ளது.தற்போது அதே தனியார் எதிர்வரும் ஐந்தாண்டு காலத்தில் மின் கட்டணத்தை மனம் போன போக்கில் ஏற்றிக் கொள்வதற்கு அரசு இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதியும் பெற்றுள்ளது. பெறப்பட்டுள்ள அனுமதியின் மூலம் மாதம் தோறும் கூட மின்கட்டணத்தை அரசு உயர்த்திக் கொள்ளும். ஒவ்வொரு முறையும் மின் கட்டணத்தை உயர்த்தும்போது  மின்சார ஒழுங்குமுறை ஆணையின் மீது பொய்யான பழியை அரசு போடுவது வெட்கக்கேடான ஒன்றாகும். அரசின் மின் கட்டண உயர்வுக்கான அனுமதியை கடிதம் மூலம் இணை மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திடம் அரசு வழங்கிவிட்டு நாங்கள் மின் கட்டணத்தை உயர்த்த வில்லை இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையமே உயர்த்தி விட்டது என கூறுவது அதைவிட வெட்கக்கேடான செயலாகும்.தற்போது உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டண உயர்வினை மானியமாக அரசு வழங்கும் என துறை அமைச்சர் அறிவித்துள்ளது மக்களை வஞ்சிக்கும் செயலாகும். ஏன் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் அதை ஏன் அரசு மானியமாக வழங்க வேண்டும். அந்த மானியம் இறுதிவரை மக்களுக்கு வழங்கப்படுமா? அல்லது மின் கட்டண உயர்வுக்கான மானியத்தை அரசே வழங்க துணைநிலை ஆளுநர் ஏற்றுக்கொண்டு உள்ளாரா? என்பதை முதலமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும்.கடந்த நான்கு மாதத்திற்கு பிறகு மீண்டும் உயர்த்தப்பட்ட மின் கட்டண உயர்வை அரசு முழுமையாக ரத்து செய்ய வேண்டும். ஆட்சியில் உள்ள எந்த அரசாக இருந்தாலும் மக்களைப் பற்றி சிந்திக்கும் அரசாக இருக்க வேண்டும். தொடர்ந்து சர்வதிகாரத்தனமாக மக்கள் மீது மின் கட்டண உயர்வை திணிக்கும் அரசின் முடிவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என அ.தி.மு.க சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இல்லையெனில் எங்களது கழகத்தின் பொதுச்செயலாளர் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஆற்றல்மிக்க தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் அவர்களின் அனுமதியைப் பெற்று மாநிலம் தழுவிய அளவில் மக்களின் நலனுக்காக அ.தி.மு.க தொடர் போராட்டங்களை நடத்தும் என ஆளும் அரசை எச்சரிக்கையாக தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார். செய்தி: பாபு ராஜேந்திரன் – புதுச்சேரி. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version